20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து…
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: விவசாய அமைச்சர் எச்சரிக்கை..!
இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக்…
நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும்…
கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்..!
கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில்…
தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
ஆசிரியர்கள் போராட்டம்
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள்…
நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது..!
நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது.
நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும்…
மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது..!
பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…
நீதி தேவதையிடம் மண்டியிட்ட போராட்டக்காரர்கள்..!
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணிகள் நீதி தேவதையிடம் மண்டியிட்டு , நீதிபதிக்கு நீதி கோரினர்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.…
உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு..!
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
புதிய திகதிகள்
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி…
மகாராஷ்டிரம்: மேலும் ஓா் அரசு மருத்துவமனையில் 18 போ் உயிரிழப்பு!
சத்ரபதி சம்பாஜிநகா்/ஒளரங்காபாத், அக். 3: மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஏற்கெனவே நாந்தேட் மாவட்டத்திலுள்ள…
வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
வட மாகாண ஆளுநர் திருமதி.பி. எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார்.
சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி…
நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!
நெடுந்தீவு கிழக்கு பகுதி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (02) மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாத நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும்…
சூடான் மோதல்: 54 லட்சம் போ் புலம்பெயா்வு!
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 54 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:…
யாழில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் கண் நோய் தாக்கம் ..!
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் வழமைக்கு மாறான கடும் காற்றுடனான காலநிலை காரணமாக குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருவது அவதானிக்க்ப்பட்டுள்ளது.
கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர்…
கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு…
யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்
காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானை தாக்குதலில்…
கிளிநொச்சியில் சூரிய மின்சார உற்பத்தி ஆரம்பிக்க திட்டம்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.…
யாழில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை போக்குவரத்து பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதவி விலகி நாட்டைவிட்டு…
வெளிநாடொன்றில் வெடித்து சிதறிய விமானம்: இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!
ஜிம்பாப்வே நாட்டில் நடுவானில் விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே - முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளராக இந்தியர் ஹர்பால் ரந்தாவா இருந்து வருகிறார்.…
சனல்4 தொலைக்காட்சியின் விரும்பத்திற்கு ஆட முடியாது : கொந்தளித்த ரணில் – மகிந்த…
சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது சரியான விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விகாரைக்கு சென்று வந்த மகிந்த, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு…
வவுனியா அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் சேதம்
வவுனியா - செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (04.10.2023) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் நவக்கிரக…
நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்
நீதிபதி சரவணராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த…
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வீட்டுத்தோட்ட உதவிகள் வழங்கி…
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக வீட்டுத்தோட்ட உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
#################################
லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன்…
சர்வதேச விசாரணை வேண்டாம்; ஆட்சியை கைப்பற்றும் எண்ணமும் இல்லை
சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…
நாட்டின் விலையேற்றங்களுக்கு மக்கள் போராட்டமே காரணம்! நாமல் ராஜபக்ச கண்டுபிடிப்பு
அரகலயா அல்லது மக்கள் போராட்டமே நாட்டில் வரிகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழி வகுத்ததற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எரிபொருள் விலையை…
பிரித்தானியாவில் இறந்த கணவனின் குரலை ரயில் நிலையத்தில் கேட்டு மகிழ்ந்த மனைவி! சுவாரஸ்ய…
பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னுடைய இறந்த கணவனின் குரலை கேட்க தினமும் ரயில் நிலையம் சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்
பிரித்தானியாவில் மெக்கலமின் என்ற பெண்ணின் கணவர் ஆஸ்வால்ட்…
41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற வேண்டும் இந்தியா அறிவுறுத்தல்
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப்…
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு..!
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில்…
மகிந்தவுக்கு கடாபி கொடுத்த பெறுமதியான பரிசு: பல வருடங்களின் பின் வெளிவரும் உண்மை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு சென்று இரங்கல் செய்தியை வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
லிபியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் செய்தியை…
நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும்: க.சுகாஷ்
தற்போது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமை நாளை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு…
பெறாமகளின் மரணத் தகவல் அறிந்த மறுகணமே உயிரிழந்த சிறிய தாய்..!
அம்பாறையில் பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
அம்பாறை அக்கரைப்பற்றில் நேற்று (03) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று…
முதலாவது விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாண வியாஸ்காந்
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது…
சகல கட்டுப்பாடுகளும் அடுத்தவாரம் தளர்வு; வெளியான அறிவிப்பு!
அடுத்த வாரம் முதல் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக…
இத்தாலி: வெனிஸ் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர் என்று…