டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை…
அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெளிவான வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக…
ஜனாதிபதி நிதியத்தில் பணம்பெற்றவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்
வெளிநாடுகளில் கல்வியை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறித்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு, சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது…
தலபத் கந்த வனப்பகுதியில் தீ விபத்து ; பல ஏக்கர் நாசம்
ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்து 121வது கிலோமீற்றர் தூண் அருகே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரனை…
போர் நிறுத்தம் வேண்டுமா? எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்! டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை
போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலையான அமைதி ஒப்பந்தம்
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய…
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த வான் பாதுகாப்பு சுதர்சன சக்கரத்தின் சிறப்புகள்…
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.…
மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.…
நாட்டில் முக்கிய அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று (17) முதல் அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தபால் தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் அஞ்சல்…
நடு வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் ; இருவர் படுகாயம்
தனமல்வில - மாத்தறை பிரதான வீதியின் ரணவரனாவ பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி, பேருந்து மற்றும் சிற்றூர்ந்து என்பன விபத்தில் சிக்குண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
சாவகச்சேரியில் களவில் ஈடுபட்ட குற்றத்தில் குடத்தனையில் இருவர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் குடத்தனை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்
சங்கானை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடொன்றில் ஆட்கள்…
யாழில். நண்பியின் நம்பிக்கை துரோகத்தால் உயிர்மாய்த்த பெண்
யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,…
ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்
ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.
மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர்.…
ட்ரம்பை சந்தித்தது புடின் அல்ல – ரஷ்ய ஜனாதிபதி குறித்து பரவும் வதந்திகள்
விளாடிமிர் புடின் மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையேயான அலாஸ்கா சந்திப்பு குறித்து இணையத்தில் பரபரப்பான வதந்திகள் உருவாகியுள்ளன.
பலர், புடின் அலாஸ்கா வந்திறங்கவே இல்லை என்றும், தனக்கு பதிலாக தன்னைப் போலவே இருக்கும் வேறொருவரை (Body Double)…
மருமகனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மாமியார் – அதிர்ச்சி சம்பவம்
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. இதனிடையே, கடந்த ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபத்ராவை ஜலந்தர் கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து கிராம தலைவர்களிடம்…
மியான்மா் ராணுவ விமானத் தாக்குதலில் 21 போ் உயிரிழப்பு
மியான்மரின் மொகோக் நகரிலுள்ள ரத்தினக் கல் சுரங்க மையத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 16 பெண்கள் உட்பட 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து கிளா்ச்சி ஆயுதக் குழுவினா், உள்ளூா் மக்கள் மற்றும் இணையதள ஊடகங்கள் கூறுகையில்,…
இந்தியாவிலிருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட சலுகை
இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் பயணச்சீட்டு கட்டணம்…
நல்லூர் திருவிழாவுக்காக வந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த பெரும் துயரம்
நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் வசிக்கும் 52வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் வசிக்கும் இவர் நல்லூர்…
தமிழர் பகுதியொன்றில் இளம் பெண் கைதால் அதிர்ச்சி
ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சனிக்கிழமை (16) மாலை 5.00 மணியளவில்…
பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 307 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பல மாவட்டங்களில் தொடர்…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பட்டித்திருவிழா பக்திபூர்வமாக நடைபெற்றது
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டித்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.
சந்தான கோபாலர் உற்சவம்
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து ,…
கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு – திருச்செந்தூரில்…
கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகை
தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான…
வெளிநாடொன்றில் இலங்கையர் செய்த மோசமான செயல் ; அதிர்ச்சியில் பொலிஸார்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் - புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
இலங்கை அரசின் முடிவால் அதானி திட்டத்தில் இழுபறி
மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் சக்திக்கென அதானி பெருமளவு நிதியை அள்ளிவீசியுள்ள நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் திருப்பி கொடுக்கும் என…
நல்லூர் கார்த்திகை திருவிழா
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…
அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!
அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த…
யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி நேற்றிரவு(16) சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும்…
யாழ். நல்லூர் திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு ; அச்சத்தில் பக்தர்கள்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை…
அநாமதேய தொலைபேசி அழைப்பால் நல்லூரில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர்,…
நான்கு பிள்ளைகள் பலி: ஒரே ஊரில் இரண்டு துயரச் செய்திகள்
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பிள்ளைகள் பலியாகியுள்ளார்கள்.
காருக்குள் கண்டெடுக்கப்பட்ட பிள்ளைகள்
பீஹார் தலைநகர் பாட்னாவில், நேற்று மாலை கார் ஒன்றிற்குள் இரண்டு பிள்ளைகள் பேச்சுமூச்சில்லாமல்…
மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணி நீக்கம்
தவறான நடத்தை குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதித்துறை சேவை ஆணையகம் பணிநீக்கம் செய்துள்ளது, இதன் மூலம் இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
தனி விசாரணையைத்…
டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பல முக்கிய நிகழ்வுகள்…
டிரம்ப் – புடின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..
உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புடின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் மீது போர்…
சீனாவில் உலக சாதனை படைத்த கிளி
சீனாவைச் சேர்ந்த கிளி ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
33.50 செக்கன்களில் 10 நிறங்களைக் கண்டுபிடித்த கிளி என்ற சாதனையை சீனாவை சேர்ந்த ஜியாங்கி படைத்துள்ளது.
ஒரே நிறம் கொண்ட பந்தை, அதே நிறம் கொண்ட கூடையில் போடுவதன் மூலம் இந்த சாதனை…
லண்டனில் பிரபலமான உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட நாய் இறைச்சி: அதிகாரிகள் நடவடிக்கை
லண்டனில் உள்ள வியட்நாமிய உணவகம் ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அது நாய் இறைச்சி
சவுத்வார்க் பகுதியில் ஓல்ட் கென்ட் சாலையில் அமைந்துள்ள Pho Na உணவகத்திலேயே…