;
Athirady Tamil News

பாலஸ்தீன தூதுவரிடம் கவலை தெரிவித்த ரிஷாட் பதியுதீன்

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை நாடாளுமன்ற உறுப்பினருமானர் ரிஷாட் பதியுதீன் பாலஸ்தீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில்…

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; நபருக்கு நேர்ந்த சோகம்

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை…

பெயர் சூட்டும் முன்னே உயிரிழந்த சிசு

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து ஐந்து நாட்களான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு பிறந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல்: ஜேர்மனியில் பரபரப்பு

ஜேர்மனியில் பெர்லின் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலமொன்றின் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகின்றது. குறித்த வழிப்பாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று வெடிக்கும் தன்மை உடைய…

பிறப்பு – இறப்புச் சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்: கிழக்கு ஆளுநர் கடும்…

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி…

வாழைப்பழத்தால் பறிபோன உயிர்

வாழைப்பழத்தின் சிறிய துண்டு சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளார். கொழும்பு - பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்…

நாடாளுமன்ற செங்கோலை தொட்டவருக்கு தடை

நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு இத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு…

பெண் பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அனுப்பும் பெற்றோருக்கு எச்சரிக்கை: ஆசிரியரின் துர்நடத்தை…

மொனராகலையில் மேலதிக வகுப்புக்கு சென்று மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல, லியங்கொல்ல பிரதேசத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கணித பாடம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரை விடுதலை செய்ய உத்தரவு!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளதாக…

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த ஆசிரியைக்கு வழியில் அசம்பாவிதம்!

தினியாவல பிரதேசத்தில் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்ட போது ஆசிரியை தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியர்…

நுகேகொடையில் விபத்தில் பலர் காயம்

கொழும்பு - நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மற்றுமொரு…

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு!

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர்…

வெள்ளத்தில் தவிக்கும் நீர்கொழும்பு மக்கள்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. நேற்று புதன்கிழமை (18) பகல் முதல் இரவு வரை பெய்த மழையால், பெரிய முல்லையில் தெனியாய வத்தை, ஜயரத்ன வீதியில் இரப்பர்…

கொழும்பை வந்தடைந்துள்ள இந்தியக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள,…

இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை கடன்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இரண்டாம் தவணை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று…

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலை பகிஸ்கரிக்கும் கல்முனை பொதுச்சந்தை

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தால்…

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் அவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில்…

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு…

கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது, திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் பிரதமர்…

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதி பெரிய அளவில் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையில்…

தேர்தலை நடத்தாமல் தேர்தல் முறைமையை மாற்ற இடமளியோம்! சஜித் திட்டவட்டம்

தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்து மக்களின் வாக்குரிமையை இல்லாமலாக்க இடமளிக்கமாட்டோம். அதனால் தேர்தலை நடத்தாமல் எந்த தேர்தல் முறை மாற்றத்துக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். அது தொடர்பான கலந்துரையாடல்களிலும் நாங்கள்…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை: உயிர் அச்சுறுத்தலும் இல்லை –…

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று…

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த கதி

காலி ஹிக்கடுவ கடலில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபரை நாரிகம பொலிஸார் மீட்டு காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டவர் இந்த வெளிநாட்டவர்…

பேனா குழாயில் வைத்து போதைப்பொருள் விற்பனை

பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து மாணவர்களிடையே விநியோகிக்கும்…

இஸ்ரேல்: போர் என்பதே கொடூரமானது! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது –…

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில்…

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார். அவ்வகையில், நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சமாளிப்பதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி…

அதிபரின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத காவல்துறையினர் : சாணக்கியன் கண்டனம்

மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்யச்சல் தரை விவகாரம் தொடர்பில் காவல்துறையினருக்கு அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும், இன்னும் அதன்படி காவல்துறையினர் செயற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…

இலங்கையில் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியடைந்த மக்கள்!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய…

கொழும்பில் கப்பம் வர்த்தகரை கொலை செய்ய முயற்சி: வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு

ஒரு மில்லியன் ரூபா கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற இருவரை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவரே இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு…

இஸ்ரேலுக்கு சார்பாக இலங்கை அரசு அறிக்கை: எதிரணி காட்டம்

இலங்கை அரசு இஸ்ரேலுக்குச் சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்திலுள்ள மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லையென எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற…

இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி: திடீரென நீர்நிலைகள் வற்றியதால்…

கொத்மலை - ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில்…

எதிர்க்கட்சி தலைவராகவுள்ள நாமல்: ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு அதிகாரம்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் ஆசனம் பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில்…

காசா மீதான கோர தாக்குதலுக்கு நாம் காரணம் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல்

காசாவில் மருத்துவமனை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தக்க ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. கசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதலால் 500 இற்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர், இது முழு உலகையும் அதிர்ச்சியடைய செய்தது.…