;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள் கொடி உறவுகள் என கூறுவதில் பயன் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை…

யாழில். 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றத்தில் தாய் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை…

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக…

கனடா மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது. கனடாவில் நிலவும்…

இன்றைய மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

இன்றையதினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை…

இந்த மாத அஸ்வெசும உதவித்தொகை இன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்

இந்த மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை இன்று (13) பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. 1,725,795 பயனாளிகள் குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என்று நலன்புரி நலத்திட்ட சபை தெரிவித்துள்ளது. அவர்களின் கணக்குகளில் வரவு…

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்

அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (85) காலமானார். மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும்…

இலங்கையில் மதுபானம் தயாரித்து சிக்கிய வெளிநாட்டு பிரஜை

வெல்லம்பிட்டிய, பிராண்டியாவத்த பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சீனப் பிரஜை ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை நடவடிக்கைகள் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸாரும் விசேட…

குளிர்பானம் அருந்திய தந்தையும் மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு…

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 24 அகதிகள் விடுதலை…

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; அழகிகள் நால்வர் உட்பட 6 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் இந்த விபச்சார…

பாரவூர்தியில் மோதுண்ட குடும்பஸ்தர் பலி!

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹல்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சைக்கிளுடன் பாரவூர்தி ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து…

வங்கதேசம்: வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் 1,400 பேர்..!

ஜெனீவா : வங்கதேசத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆக. 5 வரையிலான மூன்றே…

புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை… பிரித்தானியா…

சட்ட விரோத புலம்பெயர் மக்கள் அல்லது குற்றவாளிகளைத் திரும்பப் பெற மறுக்கும் நாடுகள் விசா தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். தடைகளை எதிர்கொள்வார்கள் பிரித்தானியாவின் நாடுகடத்தல் நடவடிக்கையில்…

கனடிய கார்களுக்கு 100 சதவிகிதம் வரி… ட்ரம்பின் அடுத்த மிரட்டல்

எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்காவின் 25 சதவிகித வரிகளை எதிர்கொள்ள கனடா தயாராகி வரும் நிலையில், கனடாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீது கூடுதல் வரியை விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 100…

150 ஆண்டுகள் பாரம்பரிய சுரங்கம்! உக்ரைனிய கொடிய பறக்க விட்ட வீரர்கள்

உக்ரைனிய படைகள் Centralna சுரங்கத்தில் தங்கள் நாட்டின் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். உக்ரைன் கொடிய ஏற்றிய படைகள் உக்ரைன் படைகள் டொரெட்ஸ்கில்(Toretsk) உள்ள "சென்ட்ரல்னா”(Centralna) சுரங்கத்தின் மீது தங்கள் தேசியக் கொடியை ஏற்றியுள்ளன.…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் முத்து.இவரது மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். முத்து…

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த திருடன்

அனுராதபுரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் ஒரு பொலிஸ் அதிகாரியின் காதை கடித்ததில் காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும்…

ட்ரம்பை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்த மத்திய கிழக்கு நாடு

பாலஸ்தீன பகுதியான காஸாவை கைப்பற்றும் டொனால்டு ட்ரம்பின் திட்டத்திற்கு மத்திய கிழக்கு நாடான ஜோர்தான் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடுகடத்துவதற்கான போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் இருந்து சுமார் 2,000 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை…

கண்ணாடி அணியாவிட்டால் 1,000 பவுண்டுகள் அபராதம்: பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

பிரித்தானியாவில் சாரதிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடி அணியாவிட்டால் 1,000 பவுண்டுகள் அபராதம் அதாவது, மூக்குக் கண்ணாடி அணியும் வழக்கம் கொண்டவர்கள், வாகனம் ஓட்டும்போது கண்ணாடி அணிய மறந்தால் அவர்கள் 1,000…

2 பவுண் தங்க நகை மற்றும் போதைப் பொருளுடன் திருட்டு சந்தேக நபர் கைது

வீடு உடைக்கப்பட்டு 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 28 வயது சந்தேக நபரை போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…

‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் அவா்களுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நட்டஈடு குறித்து வெளியான தகவல்

2022 ஆம் ஆண்டு அமைதியின்மையின் போது தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி இழப்பீடு கோரிய, எந்தவொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், இழப்பீடுகளை வழங்கவில்லை என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வன்முறையின் போது தங்கள்…

OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை!

எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து…

இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.., எங்கு தெரியுமா?

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் வாடகை மனைவி என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. எந்த மாநிலம்? இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் பல ஆண்டுகளாக வினோதமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த…

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த…

முன்னாள் எம்பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு…

தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய இளைஞன் பரிதாப மரணம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நிந்தவூர், அல்மினன்…

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று இதுவரை 46.25 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி…

தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை

தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா். அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது.…

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி நடந்து சென்ற ஒருவரை அதே திசையில் வந்த தனியார் பேருந்து மோதி…

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் புதன்கிழமை தொடர்கின்றது. காணி உரிமையாளர்களினால்…