;
Athirady Tamil News
Daily Archives

23 June 2025

கடல் வழித்தடத்தை மூட ஈரான் ஒப்புதல்? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர…

மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை இஸ்ரேல் வீரர்கள் தகர்த்ததாகவும்…

கொழும்பில் விறாய்யின் ஆட்சி நிலத்திருக்குமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த பொதுத் தேர்தலில் விகிதாசார முறையில் தனிக் கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று சாதனை படைத்த தேசிய மக்கள் சக்தி கடந்த 70 ஆண்டுகளில் தலைநகரைக் கைப்பற்றிய முதலாவது இடதுசாரி கட்சி என்ற பெருமையையும்…

சிரியாவில் பெரும் அதிர்ச்சி ; தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியிலுள்ள தேவாலயத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டுவைலாவில்…

அதிகரிக்கும் போர் பதற்றம் ; ஈரானின் 6 விமான நிலையங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்!

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றமை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்…

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும்…

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இலங்கைக்கு வந்தடைந்தார். ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி

பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கத்தரினாவில் 21 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலா ஹாட் ஏர் பலூன் சனிக்கிழமை அதிகாலை திடீரென…

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டடம் நடத்து வருகின்றனர். ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது…

சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளராக பொன்னையா குகதாசன் திருவுளச்சீட்டு மூலம் தேர்வு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு…

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா: முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அரசாங்க…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா - முன்னாயத்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் நேரில் ஆராய்வு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான…

காஸாவிலிருந்து 3 பிணைக் கைதிகளின் சடலம் மீட்பு: இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 4 போ் உயிரிழந்தனா்; 22 போ் காயமடைந்தனா். தற்போது இஸ்ரேல்- காஸாவின் ஹமாஸ்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக…

முன்பே வெளியேறிவிட்டோம்: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான்!

அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு முன்னரே நாங்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே 8 நாள்களுக்கு மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்…

பதவியா வைத்தியசாலையில் மகன் மாயம்: 16 வருடங்களாக நீளும் தாயின் போராட்டம்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் இன்றைய…

சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்குவோம் – தவிசாளர் நிரோஸ்

ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்கவேண்டும் என வலிகாமம்…

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற மேலவைத் தலைவா்…

பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளன – ரஷ்யாவின் எச்சரிக்கை

பல நாடுகள் ஈரானுக்கு அணுகுண்டுகளை வழங்க தயாராக உள்ளதாக்க ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுஆயுத திட்டங்களை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பின்னர், ஈரானின் வெளிவிவகார அமைச்சர்…

இஸ்ரேலில் இருந்து நாட்டுக்கு திரும்பும் இலங்கையர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக…

ஈரான் – இஸ்ரேல் போர் ;திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான்…

மயிரிழையில் உயிர் தப்பிய சாரதியும் பயணிகளும்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது. நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முயன்றது. இதன் போது…

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் மீது…

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள். ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7…

கூடுதல் விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த நபர்

விடுமுறைக்காக மனைவியை 4 முறை திருமணம் செய்த நபரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 முறை திருமணம் தைவானில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் 6, 2020 அன்று முதல் திருமணம் நடைபெற்றுள்ளது. தைவானில் தொழிலாளர் உரிமை சட்டப்படி,…

யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம்; தவிக்கும் பிள்ளைகள்

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே…

எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம்

எரிபொருள் தட்டுபாடு ஏற்படலாம் என பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும்…

யாழ்ப்பாணம் செம்மணியில் ஏற்றப்பட்டது ‘அணையா தீபம்’

யாழ்ப்பாணம் செம்மணியில் ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: வான்வெளியை மூடிய இஸ்ரேல்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் தனது வான்வெளியை மூடியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 21)…

பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

சமூகப் பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வேலணை பிரதேச செயலாளர் கே. சிவகரன் தலைமையில் 22.06.2025 ஆம் திகதி வேலணைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுதி அமைப்பானது, இஸ்ரேலுடனான போரில்…

சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் மின் அலகுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 27 ரூபாவிலிருந்து 45.80 ரூபா…

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்

கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின்…

தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: தப்பிய கார்!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயர் வெடித்து லாரி தீப்படித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஆரணி வழியாக…

அமைதி அல்லது அழிவு ஏற்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில்,…