;
Athirady Tamil News
Daily Archives

7 December 2025

NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்

NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO…

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது…

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

முன்னாள் அமைச்சர் 'சொல்லின் செல்வர்' செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின்…

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும்…

வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்​பானிக்கு சொந்​த​மான நிறு​வனங்​களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்​தது. பின்​னர் இந்த முதலீடு வாராக் கடன்​களாக மாறின. இதுகுறித்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த…

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! – எதிர்க்கட்சித் தலைவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம்…

புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி

video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்…

உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ…

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின்…

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்

video link- https://fromsmash.com/0spo3OdntH-dt அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை…

உக்ரைனில் ரஷியா ட்ரோன் மழை! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்!

உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள்…

2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை… தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத்…

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!

தென்னாப்பிரிக்கா நாட்டில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில், தலைநகர் பிரிட்டோரியாவின் அட்டெரிட்ஜ்வில்லே பகுதியில், 3 அடையாளம் தெரியாத…

அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியப் பெண் பலி!

அமெரிக்காவில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் சஹாஜா ரெட்டி உடுமாலா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயில அமெரிக்கா…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’ – அமைச்சர்…

"வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல்…

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை…

வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு…

யாழில். 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி…

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

கோவா தீ விபத்தில் 23 பேர் பலி

வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில்…

பாக். – ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சாமன் நகரில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் உடனான எல்லையில், நேற்று…

தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை…

நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக…

சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக்…

பஸ்தார்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மாவட்​டம் பகாவந்த் கிராமத்​தைச் சேர்ந்​தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்​டில் தனது 6 வயதில் அங்​குள்ள பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்​துள்​ளார். அப்​போது அவரது கிராமத்​தைச் சேர்ந்த ஒரு​வர் லிசாவை…

சூடான்: ட்ரோன் தாக்குதலில் 43 குழந்தைகள் உள்பட 79 பேர் பலி!

சூடான் நாட்டில் கிளர்ச்சியாளர்களின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை நடத்திய தாக்குதலில் 79 பேர் பலியாகினர். சூடான் நாட்டின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள கலோகி நகரில் மழலையர் பள்ளி, மருத்துவமனை, மக்கள் குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட…

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை – ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06)…

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள்…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய…

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

நோபல் பரிசு கேட்ட..! அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான ஃபிஃபா பரிசு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைதி பரிசை ஃபிஃபா நிர்வாகம் வழங்கியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்தாண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிஃபா…