;
Athirady Tamil News
Yearly Archives

2025

கூகிள் மேப்பால் ஏற்பட்ட விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

புதிதாக ஒரு பகுதிக்கு செல்லும் போது, வழிகளை கண்டறிய கூகிள் மேப் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதேவேளையில், கூகிள் மேப் சில நேரங்களில் தவறான வழிகளை காண்பித்து, சிலரை விபத்தில் சிக்க வைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.…

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து விபத்து; இருவர் பலி

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

இந்தியா வெள்ளத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது: பாகிஸ்தான்! பஞ்சாபில் 17 பேர் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 17 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள மாகாணங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை…

தமிழர் பகுதியில் பரபரப்பு சம்பவம் ; ஆலய வளாகத்தில் தவறான முடிவெடுத்து நபர்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (28.08.2025) இடம்பெற்றுள்ளது. இது…

ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப தீர்மானம்

தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என அமைச்சு அறிக்கை…

வளர்ப்பு நாயை நிலத்தில் அடித்து, ஆற்றில் வீசிய கொடூர இளைஞன்

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் நானுஓயா காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி, பின்னர் ஆற்றில் வீசிய காணொளி ஒன்று…

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – கடற்றொழி்ல் அமைச்சர்…

கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (28.08.2025) யாழ்.அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச்…

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த…

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வெள்ளப்பெருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு…

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

காஸாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கு, அழுவதற்குக்கூட வலிமையில்லை என 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ்…

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

இந்தியா மீது, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்திருக்கும் நாளில், அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமரிசித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது போல், வரி…

பாலஸ்தீனியர்களுக்கு இது தவிர வேறு வழியில்லை: காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் உறுதி

பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மோசமடையும் பாலஸ்தீனியர்களின் நிலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 62,895 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.…

அமெரிக்க கத்தோலிக்கப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ; 3 பேர் பலி

அமெரிக்காவின் மினியாபோலிஸ் பகுதியில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலையொன்றில் நடந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சுமார் 7 பேர்…

ஜனாதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் உத்தியோகபூர்வ வாழ்க்கையும் ஒன்றா?

எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டு ஜீ 77 உச்சி மாநாட்டுக்காக கியூபாவுக்குச் விஜயம் செய்து வரும் வழியில், இங்கிலாந்தில் வுல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகத்தில் தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவொன்றுக்காகவும் சென்றுள்ளார்.…

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம்…

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வரதட்சிணைக் கொலையில், சிலிண்டர் வெடித்ததே தீ பற்றியதற்குக் காரணம் என நிக்கி கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீயில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிக்கியிடம் மருத்துவர்கள்…

அஸ்கிரிய பீடத்தின் புதிய அணு நாயக்கர்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதை அடுத்து, புதிய தெரிவுக்கான தேர்தல் இன்று கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெற்றது. இந்நிலையில் அஸ்கிரிய பீடத்தின் புதிய அனுநாயக்கராக, அஸ்கிரிய பீடத்தின் பிரதிப்…

பொலிஸாரிடம் தப்பி கைவிலங்குடன் முதலைகளிடம் சிக்கிய திருடன்

திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைவிலங்குகளுடன் முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் நேற்று (27) இரவு மில்லானியா பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்களை…

கனடாவில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரும் பெற்றோர்

கனடாவில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பிளக்ட் கனடா என்ற பெற்றோர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை…

பெரும் வெற்றி பெற்ற எலன் மஸ்க்கின் கனவு திட்டம்

ஸ்டார்ஷிப் விண்கலத் திட்டத்தின் 10 ஆவது சோதனை வெற்றி பெற்றுள்ளது. எலன் மஸ்க்கின் எண்ணக்கருவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விண்கலத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய, எலன் மஸ்க்கின் கனவு இந்த சோதனையின் மூலம் நனவாகியுள்ளது.…

விபத்தில் 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

ஹொரொவபொத்தான - கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு விலகி பாலத்தின் பாதுகாப்புத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 10 வயது சிறுமி உள்ளிட்ட இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்ததாக…

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடு வீதியில் நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மருதமுனையை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, மாநகர சபை காவலாளி கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை…

செம்மணிப் புதைகுழியில் தொடரும் அகழ்வுப் பணி: இன்று 6 எலும்புக்கூடுகள் அகழப்பட்டன

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்…

அமெரிக்க மத்திய வங்கி கவர்னருக்கு அதிரடி பதவி நீக்கம்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிரடியாக பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி டொனால் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார்.…

இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி., ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தம்., அமெரிக்காவின் முரணான…

இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்கா-ரஷ்யா இடையே எரிசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா அதிகாரிகள், Sakhalin-1 என்ற ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு…

கணவனின் வெறிச்செயல் ; கொடூரத்தின் உச்சத்தை காட்டிய சம்பவம்

இந்திய மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத மனைவியை கணவன் கொடூரமான முறையில் சித்ரவதை செய்த சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கார்கோன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குஷ்பூ பிப்லியா (23) பொலிஸில் அளித்த…

இரு பாடசாலை மாணவிகளை பலியெடுத்த கோர விபத்து ; சாரதிக்கு பிறப்பிக்கபட்ட உத்தரவு

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குறுந்திரைப்படங்கள் நாளை திரையிடப்படவுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திரையிடப்படவுள்ளன. போர்ச்சூழலில் தனது மகனைப் பாதுகாக்கப் போராடும் ஒரு…

நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு

நிந்தவூர் பிரதேச சபையின் 02 ஆவது சபை அமர்வு நடவடிக்கைகள் புதன்கிழமை (27) சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி தலைமையில் ஆரம்பமானது பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நடவடிக்கைகள் சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச…

AI சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுவன் – கதறும் பெற்றோர்!

சாட்ஜிபிடியுடன் பேசி வந்த 13 வயது சிறுவன் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டார். ChatGPT ஆலோசனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 16 வயதான இளைஞர் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளைக்…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  30 ஆந் திகதி  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி

video link- https://fromsmash.com/~p~8JzwD9--dt எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு படைகளால் தலை துண்டிக்கப்பட்ட மலகாஸி மன்னர் டோயராவின் மண்டை ஓடு என நம்பப்படும் மண்டையோட்டை பிரான்ஸ் அரசாங்கம் திருப்பி ஒப்படைத்துள்ளது. இந்த மண்டையோடுகள் சுமார் ஒரு நூற்றாண்டுகளாக பிரான்ஸ் வசமிருந்தவை என்பது…

108 ஜோடிகளுக்கு திருமணம்

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருந்த 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் ,…

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து காபூலின் அா்கண்டி பகுதியில்…

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில்…