;
Athirady Tamil News
Monthly Archives

January 2026

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக…

ட்ரம்ப் அடித்துவிட்ட பொய் ; முற்றாக மறுக்கும் ஈரான்

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர். மரண தண்டனை போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான்…

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பகீர் தகவல்; 4,289 சம்பவங்கள்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் தலைவி ப்ரீத்தி இனோகா ரணசிங்க, 2026 ஜனவரி மாதம் வரையில் உயர்…

மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை

வாஷிங்டன், அமெரிக்கா - ஈரான் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.போராட்டத்தை ஒடுக்க. அரசு தீவிர…

இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் ; அரிசி சந்தையில் புதிய போக்கு

மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் தற்போது சம்பா மற்றும் கீரி…

பாகிஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் குரேஷி மூர் கிராமத்தில் நேற்று இரவு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிராமத்தலைவர் நூர் அகமது மெஷல் வீட்டில்…

800 கிலோ சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட…

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால் நேர்ந்த விபத்து ; 3 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், பனிப்பொழிவு காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஜெர்மனி…

திறந்த வேகத்தில் மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப்…

உலகையே வியப்பிலும் குழப்பத்துக்கும் ஆளாக்கிய ஒற்றை பென்குயின் ; வைரலாகி வரும் வீடியோ

தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா…

சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

ஹட்டன், கொட்டகலை நகரில் இன்று (24) காலை ஒரு காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் கொட்டகலை ரோசிட்டா பகுதியில் நிகழ்ந்துள்ளது.…

சிறைப் பறவை டூ காதல் பறவை! ஆயுள் கைதிகள் திருமணத்துக்காக 15 நாள் பரோல்

ராஜஸ்தானில் ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரிடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இரு குற்றவாளிகளான ஹனுமான் பிரசாத்தும் பிரியா சேத்தும் 6 மாதங்களுக்கு முன்னர்…

78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகவும்…

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

உருகும் உலகின் பனிப்பாறைகள்; சென்னைக்கு பெரும் பாதிப்பு?

உலகின் பனிப்பாறைகள் உருகி வருவதால், சென்னை உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகினால் என்ன ஆகும்?காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பனிப்பாறைகள் உருகி வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை…

ஈரான் போராட்டம்: உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது

ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,002-ஆக அதிகரித்துள்ளது. இந்தப் போராட்டம் கடந்த டிசம்பா் மாத இறுதியில் தொடங்கியது. இதுவரை உயிரிழந்தவா்களில் 4,716 போ்…

யாசகப் பெண் கொடூரமாக கொலை; பொலிஸில் சரணடைந்த இளைஞன்

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக…

3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' இன்று சனிக்கிழமை (24.01.2026) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்…

அமெரிக்கா: தந்தையுடன் 5 வயது சிறுவன் கைது: மினசோட்டாவில் குடியேற்றத் துறை நடவடிக்கை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் அவருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 5 வயது சிறுவன் ஆகிய இருவரையும் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளனா். கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் வசிக்கும்…

வடக்கு உள்ளிட்ட இடங்களில் திங்கள் முதல் நெல் கொள்வனவு

வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்தார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின்…

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

சமூகஊடக பிரபலமாக விரும்பியதற்கு பெற்றோா் கண்டித்த நிலையில் வீட்டைவிட்டுச் சென்ற சிறுவன், பெங்களூரில் மீட்கப்பட்டாா். தில்லி காவல் துறையினா் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். தில்லி புராரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனுக்கு சமூகஊடகத்தில்…

நேபாளம்: தோ்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமா் பாபுராம்: இளைஞா்களுக்கு வழிவிட…

நேபாளத்தில் எதிா்வரும் பொதுத்தோ்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ என்று முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டாராய் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இளைஞா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவும், புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வர வழிவிடவும் இந்த…

செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச் சேர்ந்த 60 வயதுடைய அவர் சடலமாக காணப்படுவதாக…

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை கேட்கும் சிறிதரன் எம்பி!

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு வாக்குறுதியளித்ததாகவும், அதனை நிறைவேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.…

ஜப்பான் நாடாளுமன்றத்தை பதவியேற்ற மூன்றே மாதத்தில் கலைத்த பிரதமர்!

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும், 104-ஆவது பிரதமராகவும் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். மேலும், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனத்

யாழில் இரவோடு இரவாக வெளியேறிய இராணுவம்; 30 ஆண்டுகளின் பின் மக்கள் மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை…

மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்; 23 நாட்களில் 16 பேர் உயிர் மாய்ப்பு; அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. நேற்றயைதினம் தாழங்குடா பிரதேசத்தைச்…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றி: தலைவர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. விசில் சின்னம் இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன்…

வவுனியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சாதனை ; ஆரம்பமான புதிய யுகம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள…

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் ; பொதுமக்களுக்கு விசேட…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை…

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

ஈரான் விவகாரம்: ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், அவரது தலைமையிலான சர்வதேச…

சினிமாவை மிஞ்சும் கடத்தல் கதை ; இந்திய விமான நிலையத்தில் சிக்கிய லண்டன் வாழ் இலங்கை…

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தனது நண்பரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த குற்றத்துக்காகவே அவர் கைது…

பிரியாணியில் 20 தூக்க மாத்திரை ; கணவனின் கதையை முடித்து மனைவி ஆடிய நாடகம்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மனைவி தகாத உறவில் இருந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட குறித்த பெண் இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளை…