;
Athirady Tamil News

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? (படங்கள், வீடியோ)

0

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? இரா.துரைரெத்தினம் செருப்பால் அடி வாங்கப் போனதன் காரணம் என்ன?? (படங்கள், வீடியோ)

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் அமரர்.நடேசன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் புளொட் முக்கியஸ்தரிடம் செருப்பால் அடி வாங்கும் வகையில் தரக்குறைவாக செயல்பட்ட, மூத்த ஊடகவியாளரென தன்னைத்தானே கூறிக் கொள்ளும் மட்டக்களப்பு இரா.துரைரெத்தினம் என்பவர்..

நடந்தது என்ன??

மூத்த ஊடகவியாளரென தன்னைத்தானே கூறிக் கொள்ளும் மட்டக்களப்பு இரா.துரைரெத்தினம் என்பவர், தனக்கு புளொட் அமைப்பால் உயிராபத்தென பொய் முறைப்பாடு வழங்கி சுவிஸுக்கு குடும்பத்துடன் தப்பி சென்று வாழ்ந்து வருபவர்.

இவர் வயது போன காலத்திலும் பல சிலுமிஷ விளையாட்டுகளில் ஈடுபட்டு குடும்ப உறுப்பினர்களாலேயே கண்டிக்கப்படடவரென சுவிஸில் உள்ள தமிழர்கள் மத்தியில் பரவலான கதை உள்ளது.

அதாவது தனது உயிர் நண்பனென, இவரால் கூறிக் கொள்ளும் ஊடகவியலாளர் “தராக்கி” சிவராமின் வலதுகையாக செயல்பட்ட “தில்லை” எனும் பெண் சில வருடங்களுக்கு முன்னர் இவரது (அதாவது இரா.துரைரெத்தினம் என்பவரின்) சுவிஸில் உள்ள வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த போது நடந்தது என்ன? என்பது குறித்தும், அதாவது சுவிஸில் “பவர்கட்” (மின்சாரத் துண்டிப்பு) என்று கூறி டோர்ச்லைட்டுடன் செல்வி.தில்லை தங்கி இருந்த அறைக்கு போய் நடத்திய லீலைகள் என்ன? என்பது குறித்து சுவிஸில் உள்ள தமிழர்கள் மத்தியில் அங்கலாய்க்கும் பரம இரகசியம் சந்தி சிரிப்பது பகிரங்க உண்மை..

இவர் சுவிஸில் சில வருடங்களுக்கு முன்னர் புங்குடுதீவு குறித்தும், சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் குறித்தும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளினால் தனது முகநூலில் எழுதியதன் காரணமாக சுவிஸ் வாழ் மானமுள்ள புங்குடுதீவு இளைஞர்கள் சிலர் இவரைத் தாக்க முனைந்த போது, சுவிஸ் பொலிஸாரின் உதவி கோரி தப்பிப் பிழைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதன் பின்னரும் இவருடன் இரகசிய தொடர்பை வைத்துள்ள “ஐ.பி.சி” அதாவது தமிழ்வின், லங்காசிறி போன்றவற்றின் பிரதம ஆசிரியர் “நிராஜ் டேவிட்” என்பவர் “வாழ்நாள் சாதனையாளர்” என இவருக்கு பட்டம் வழங்கி இருந்தார். இதனால் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் “ஐ.பி.சி” நிராஜ் டேவிட் இவரிடம் அனுபவித்தது என்ன? எனும் மர்மக் கேள்வி உலாவியது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்தவாரம் மட்டக்களப்பில் நடந்த “ஊடகவியலாளர் அமரர். நடேசனின்” புத்தக வெளியீட்டில் சுவிஸில் இருந்து சென்று கலந்து கொண்ட இவ்வளவு “மர்மப் புகழ்” வாய்ந்த மூத்த ஊடகவியாளரென தன்னைத்தானே கூறிக் கொள்ளும் மட்டக்களப்பு இரா.துரைரெத்தினம் என்பவர், இவ்விழாவில் விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

ஆயினும் இவ்விழாவில் “ஊடகவியலாளர் அமரர். நடேசன் குறித்தோ, அன்றில் அவரது நூல் குறித்தோ” உரையாடாமல், “புளொட் அமைப்புக் குறித்தும், தராக்கி சிவராமின் கொலை குறித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் புளொட் அமைப்புக் குறித்தும்” மிகவும் தரக்குறைவாக உரையாடினார்.

அதனை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த புளொட் முக்கியஸ்தர் ஒருவர் அவரது உரையாடல் முடிந்ததும்,

“இது என்ன நிகழ்வு சம்பந்தப்பட்ட்து?

நீதிமன்றமே தராக்கி சிவராம் என்பவரின் கொலைக்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை எனத் தீர்ப்பளித்த பின்னரும், இவர் இப்படி உரையாடியதன் காரணம் என்ன?

அது தொடர்பாக இவரிடம் ஆதாரம் இருந்தால் பகிரங்கத்தில் இப்போதே தெரிவிக்க வேண்டும் இல்லாவிடில் இவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்,

இவரது இதுபோன்ற நடவடிக்கை இவ்விழாவை ஒழுங்குபடுத்திய ஊடகவியலாளர் சங்கம் தவறான நடவடிக்கைக்கு துணை போகிறது என்பதை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கிறேன்

எனக் குறிப்பிட்டதுடன் அதுக்கான பதிலை அவர் (இரா துரைரெத்தினம் சொல்ல வேண்டும் நன்றி” எனக் கூறி அமர்ந்ததும்..

இரா துரைரெத்தினம் என்பவர் “ஒட்டுக் குழுக்களுக்கு நான் எப்பவுமே பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை, அவர்கள் தமிழ் மக்களால் மன்னிக்க முடியாதவர்களெனக்” கூறியதும், .

அப்பதிலைத் தொடர்ந்து உடனடியாக எழுந்த புளொட் முக்கியஸ்தர் “செருப்பால அடிக்கிற மாதிரி நான் கேட்பேன், மரியாதையாகக் கேடடால், மரியாதையாகப் பதில் சொல்லணும், விளங்கியதா?

உங்களுடன் விவாதிக்க இங்கு நான் வரவில்லை..

நீங்க இந்த நாட்டில நிக்க ஏலாமல் ஓடிப் போன கூடடம், பிறகேன் கதைக்கிறீங்க?

அந்த தியாகி நடேசன் குறித்து நன்றி சொல்வோம், மரியாதை கொடுப்போம்.. அந்த தியாகி இந்த நாட்டில இருக்கிற மக்களுக்காக செத்து இருக்கிறான்,

நீங்கள் இங்க இருக்கேலாம இங்கிருந்து ஓடிப்போய், பாதுகாப்புக்கு நீங்களும் உங்கட பிள்ளைகளும் உங்கட குடும்பமும் சேர்ந்திடுவீங்க.. பிறகு கதைக்க வந்திருவீங்க..

மூடிற்று இருங்க.. கதைச்சால் கூடக் கதைப்பேன் நான்..

எப்படியும் கதைக்க தெரியும்.. எல்லாக் கதையும் கதைக்க தெரியும்.. எல்லா வழியிலும் கதைக்க தெரியும் எங்களுக்கு..

ஒட்டுக்குழுவாம், உனக்கு காட்டுறம் நாங்க யாரு”.. என்றதும்..

விழா ஏற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக விழாவை நிறைவுக்கு கொண்டு வந்ததுடன் பாதுகாப்பாக இரா.துரை ரெத்தினத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக.. மட்டுநகரில் இருந்து “மானஸ்தன்”

மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் நடேசனின் புத்தக வெளியீட்டில் நடந்த குழப்பம் என்ன? ஊடகவியாளரெனக் கூறிக் கொள்ளும் இரா.துரைரெத்தினம் செருப்பால் அடி வாங்கப் போனதன் காரணம் என்ன?? (முழுமையான தகவல் வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.