;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்டர்- இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாரிஸ்வானி பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறியதாவது:-

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. அங்கு மேலும் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கக் கூடும். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி யூசுப் கான்ட் ஆகும். சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்பட சட்டவிரோத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.