;
Athirady Tamil News

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதி!!

0

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர்​ பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உடனான சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 5000 மெட்ரிக் தொன் அரிசி ( முன்னதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட 2000 மெட்ரிக் தொன் உட்பட) RMB 200 மில்லியன் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான சீனத் தூதுவரை இன்று (21) வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

கொழும்பு மற்றும் பெய்ஜிங்கில் உள்ள சீனத் தூதரகங்கள் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

தூதுவர் மேலும் கூறியதாவது, சீன அரசின் நேரடி ஆதரவு, சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவு உட்பட சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க சீன அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு….

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 21ஆந் திகதியாகிய இன்றைய தினம் சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளைப் பாராட்டினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட சீன நினைவுச் சின்னங்களையும் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித் தட்டுப்பாடு குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவருக்குத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் போன்றவற்றிற்காக நடைபெற்று வரும் கலந்துரையாடல் உட்பட, தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை உடனடியாக சமாளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கிய அமைச்சர் பீரிஸ், குறிப்பாக இக்கட்டான நேரத்தில் நிதியமைப்பிற்கான மேலதிக உதவிகளை நல்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பிலும் பெய்ஜிங்கிலும் உள்ள சீனத் தூதரகம் இலங்கையில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனத் தூதுவர் தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நேரடி ஆதரவு, பிராந்திய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சீனாவின் ஆதரவு உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தூதுவர் கி உறுதியளித்தார்.

5000 டொன் அரிசி (முன்னர் அறிவிக்கப்பட்ட 2000 டொன்களுடன்), மருந்துகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, இலங்கைக்கு 200 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், யுனான் மாகாணம் 1.5 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

சீனாவின் உறுதியான ஆதரவுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கையின் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, மக்கள் பரிமாற்றம், பலதரப்பு மன்றங்களிலான ஆதரவு, வறுமை ஒழிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஏப்ரல் 21

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

“பொலிஸ் தீ மூட்டியதாக சொல்கின்றனர்” நாமல் !!

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல” !!

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் !!

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை!!

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் IRICDP நிறுவுனர் அறிக்கை!!

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)

ஊரடங்கு அமுல் !!

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !!

இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர் !!

மாவனெல்லையில் பதற்றம் !!

பதவியேற்றார் பிள்ளையான் !!

போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !!

IMF ஊடான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.