யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு தரப்பினராலும் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.
அதன்படி தியாகி பொன் சிவகுமாரன்
நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தலில் ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்ததுடன் அகவணக்கம், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சி பேதமற்று பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”