;
Athirady Tamil News

13 நாளாக தொடரும் நறுவிலிக்குளம் மக்களின் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; கோப் குழுவில் முன்வைக்கப்படுமா?!! (PHOTOS, VIDEOS)

0

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் நிறுவப்பட்டுள்ள காற்றாலை உற்பத்திக்கு 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] மக்கள் ஆரம்பத்திலிருந்து தமது எதிர்பினை தெருவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 15MW WIND POWER PROJECT கொண்ட நிலையத்தினை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற இடத்தில் மேற்கொள்ளுமாறு பல அரச அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தியும் அவ் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்காத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது. மக்கள் தமது பிரச்சனைகளை பிரதேச செயலாளர் முதல் அரசாங்க அதிபர் வரை தெரியப்படுத்தியும் ஏன் இதனை தவிர்க்க முடியவில்லை என்ற தமது ஆதங்களை கவனயீர்பு ஆர்பாட்டத்தின் மூலம் தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடவேண்டியது.

மன்னார் மாவட்டமானது ஆளுமையற்ற அரச உயர் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டதாகவும் மக்களை விழிப்பூட்டுவதற்கும் சரியான இடங்களில் முதலீடுகளை நிறுவுவதற்கான தெளிவுகளை வழங்கமுடியாத திணைக்கள தலைவர்களை கொண்ட மாவட்ட மாகாக் காணப்படுகின்றமையும், வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் அசமந்த போக்கு ஏனைய மாவட்டங்களை விட அதிகமாகவும் மக்களினை தொடர்ச்சியாக பிரச்சனைகளுக்குள் சிக்கித்தவிர்க்கும் சூழலினையினையே தோற்றிவிப்பதாகக் காணப்பவதாக மக்கள் தெருவித்தார்கள். பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஏன் பதில் அளிக்க மறுக்கின்றனர் என்பதும் மக்களது வாதமாகக் காணப்படுகின்றது. உண்மையில் மன்னார் மாவட்டத்தில் நடப்பவை என்ன? மிக குறுகிய சனத்தொகையினை கொண்ட மாவட்டத்தின் அரச அதிகாரிகள் ஏன் பதிலளிக்க மறுக்கின்றனர்? என சாதாரண மக்கள் சிந்திக்கும் நிலை காணப்படுகின்றது. முதலீடுகளை சரியாக பிரதேசத்தில் மேற்கொள்வதால் முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எதிர்ப்புக்கள் ஏற்படுவதனையும் வீண் செலவுகள் மற்றும் ஊழல் – சுரண்டல்களை தவிர்க்க முடியும்.

13 நாளாக தொடரும் காற்றாலைக்கு எதிராக நறுவிலிக்குளம் மக்களின் நீதிக்கான போராட்டம்

காற்றாலைக்கு எதிராக நறுவிலிக்குளம் மக்கள் நீதி போராட்டம் 13 நாட்கள் கடந்தும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. 06.08.2023 காற்றாலை ஆரம்பவிழாவினை எதிர்த்து ஆம்பமான போராட்டம். குறித்த காலப்பகுதியில் மன்னார் மாவட்ட செயலர் மற்றும் சில மக்கள் பிரதிநிதிகளின் பதில் கடிதங்கள் கிடைக்கப்பெற்றதாக் குறிப்பிடும் நறுவிலிக்குள மக்கள் அதிகாரிகளில் பதில்கள் தமக்கு பூரண திருப்தியளிக்கவில்லை எனவும். தமது நீதிக்கான போராட்டம் தொடர்வதாகவும், நீதியினை எதிர்பார்ப்பதாகவும் தெருவித்தார்கள்.

உண்மையில் நடந்தது என்ன?

நானாட்டான் நறுவிலிக்குள மக்கள் தமக்காகவும், மன்னார் மாவட்டத்திற்காகவும், இலங்கை நாட்டுக்காகவும் புதுப்பிக்க சக்தியான காற்றைலைகளின் மூலமான மின்சார உற்பத்தியின் தேவையுள்ளதாக தெருவித்த மக்கள் ஏன் எமது குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்தார்கள்? என்றும் எமது வாழ்க்கையினை பாதிக்காக வகையிலும் வாழ்வாதாரங்களை அழிக்காமல் ஏன் இவர்களால் செயற்படுத்த முடியவில்லை என்ற கேள்வியோடு தங்களுக்கு இது தொடர்பாக பாரிய அச்சம் காணப்படுவதாகவும் தெருவித்தனர்.

அதிகாரிகள் எமது கிராமத்தினை அழிக்கவுள்ளார்களா? என்ற அச்சமும் நம்பிக்கையின்மையும் தற்பொழுது அதிகரித்துள்ளதாகவும் தெருவித்தனர். தமது கிராமம் மொத்தத் தேசிய உற்பத்தி மற்றும் வருமாணத்தில் பங்களிப்பு செய்வதாகவும் தமது எதிர்காலம் தொடர்பாகவும் அச்சமடைவதாகவும் தெருவித்தனர்.

மக்களின் கோரிக்கைகள் எவை? மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் செயற்படுத்தப்படும் நறுவிலிக்குளம் 15MW காற்றாலை மின் உற்பத்தி நிலைகள் அகற்றப்படுமா?

நறுவிக்குள மக்கள் தெருவிக்கையில் குறித்த காற்றாலை உற்பத்திகள் மக்களை பாதிக்காத வகையில் செயற்படுத்தவும் நீதி, நியாயம் பொறுப்புக்கூறல், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்தல் ஆகிய விடயங்களுக்காக தொடர்ச்சியாக போராடப்படும் எனவும் தமக்கான நீதி கிடைக்குமெனவும் நம்பிக்கையுள்ளதாகவும் தெருவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் அடிபணியப் பேவதில்லை எனவும், மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் நாடு மக்கள் தங்களுக்காக இருப்பதாகவும் இறைவனிடம் மண்டாடுவதாகவும் தெருவித்ததுடன், ஏனைய மக்களும் தங்கள் பிரதேசங்களை பேணுவதற்கும் முதலீடுகளை சரியான முறையில் நிறுவுவதற்கும் மக்கள் அவதானிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெருவித்தனர்.

மன்னார் மாவட்ட மக்களின் நிலை எவ்வாறு காணப்படுகின்றது. சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் துறைசார் நிபுனர்களின் ஆதரவுகள்

இது தொடர்பாக கூறிய நறுவிலிக்குள மக்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் காற்றாலை மின் உற்பத்தி நிறுவப்படும் இடங்கள் மற்றும் கணியவள மணல் அகழ்வு தொடர்பாக 2022ல் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை மன்னார் நகரத்தில் மேற்கொண்டனர் எனவும் சிவில் செயற்பாட்டாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் துறைசார் நிபுனர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் தொடர்ச்சியாக பலர் நறுவிலிக்குள மீட்புக்கும் மன்னார் மீட்புக்கும் ஆதரவினை வழங்குவதாகவும் தெருவித்தனர்.

சட்டரீதினான நடவடிக்கை

குறித்த செயற்திட்டம் தொடர்பாக பல சந்தேகங்கள் எமது கிராமத்திலும் மாவட்டத்திலும் நாட்டிலும் மற்றும் இந்தியாவில் கூட ஏற்பட்டதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும். குறித்த காற்றாலை மின் உற்பத்திகள் தொடர்பாக சனாதிபதிக்கும் கடிதம் மூலம் தெவித்தாகவும் கூறியதுடன் கடந்த 15 திகதி ஆகஸ்ட் மாதம் மடு தேவாலயத்தில் சனாதிபதி கூறிய விடயங்களை அதிகாரிகள் செயற்படுத்த தவறியமையே எமது கிராமத்திற்கு ஏற்பட்டுள்ளதெனவும் சனாதிபதி சூழல் மற்றும் காடுகள் கண்டல்கள் அழிப்பதற்கு இடமளிக்க கூடாது என வலியுறுத்தியமை தமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தமது பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளின் செயற்பாடுகள் எமது கிராமமக்களிற்கு திருப்தியளிக்க மறுத்தால் அல்லது காலம் தாழ்தப்பட்டால் கோப் மற்றும் கோப குழுக்களுக்கு எமது பிரச்சனையினை முன்வைக்கப்படுமென தெருவித்தனர்.
Plans to Develop Mannar as an Energy Hub – President Ranil Wickremesinghe @ Madu Church
The Mannar region, where the National Shrine of Lady Madhu is located, possesses abundant renewable energy resources. With access to solar, wind, and green energies, the Mannar district can be developed into an energy hub.
We have also formulated plans to transform Punarin into an energy city. It is important to note that all these development initiatives are designed to preserve this sacred land and its forests. I have instructed officials to seek advice and guidance from the clergy here during these development efforts.


அதிகாரிகள் மீதான நம்பிக்கையின்மை ஏன்?

நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் அதிகாரிகள் தொடர்பிலும், திணைக்களங்கள் தொடர்பிலும் அனைத்து மக்களுக்கும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. மத்திய வங்கியினால் கூட மக்களை காப்பாற்றமுடியவில்லை. எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் அதிகாரிகளும், திணைக்கங்களும் சில உள்ளன. இதனால் சிறியளவிலான நம்பிக்கை இன்றும் உள்ளது.

மற்றும் தற்போது நாட்டில் பல்தேசிய கம்பனிகளின் சூழ்ச்சியில் எம்மை போன்ற சாதாரண மக்கள் பாதிப்படைவதானது நாடு அழிவின் பாதையில் செல்வதற்கு சமனானது எனவே தான் இன்றும் நாட்டுக்காக விவசாயம், மீன்பிடி தொழில்களை பேணுகின்றோம். எமக்கு வீதியில் நின்று போராட தெரியும் நாம் எமது கிராமம் வீதியில் தொடச்சியாக நின்றால் யார் எமது குடும்பங்களை பார்ப்பது? பொருளாதார கஸ்டங்களில்லும் நாட்டுக்கு அரிசி வழங்குவதை நிறுத்துவதற்குகோ மீன்பிடி போன்ற வெளிநாட்டுவருவாய்களை குறைப்பதற்கு நங்கள் செயற்பட தயாரில்லை எனவும் கூறினார்கள்.

பல்தேசிய கம்பனிகள் தங்கள் சுயலாபங்களிற்காகவும் தமது கம்பனி வருமானத்திற்காகவும் எமது வறிய குடும்பங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம், சிறுவர்களின் கல்வியில் கைவைக்கவேண்டாம் எனவும், எமது கடல்வளம், பறவைகள், கண்டல் காடுகள், சுற்றுலாபிரதேசங்களை அழிப்பதற்கும் வெள்ளங்கள், இடி, மின்னல் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கும் இதனால் ஏற்படவுள்ள உயிர் ஆபத்துக்கள் தொடர்பிலும் தாம் அவதானத்துடன் இருப்பதாக தெருவித்தனர்.

கோப் மற்றும் கோப குழுக்களுக்கு

அதிகாரிகளின் செயற்பாடுகள் எமது கிராமமக்களிற்கு திருப்தியளிக்க மறுத்தால் அல்லது காலம் தாழ்தப்பட்டால் கோப் மற்றும் கோப குழுக்களுக்கு எமது பிரச்சனையினை முன்வைக்கப்படுமென தெருவித்தனர். நீதிக்காக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் உள்ளனர் என்ற நம்பிக்கையுள்ளது. பொருளாதார மந்த நிலைக்கு பின்னர் நாட்டினை மீள பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் தாம் எதிரானவர்கள் என நறுவிக்குள மக்கள் தெருவித்தனர்.

முன்னைய கடிதங்கள் மற்றும் ஆவணங்கள்
2022.02.01 திகதியிடப்பட்டு அன்னை வேலாங்கன்னி மீனவர் கூட்டுறவுச்சங்கம் நறுவிலிக்குளம் அமைப்பினால் குறித்த காற்றாலை தனியார் கம்பனிக்கு கடிதம் மூலம் தமது வாழ்வாதாரங்களுக்கு பாதிக்காத வகையிலும் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் சட்டரீதியான நடவடிக்கையினை மேற்கொள்ளப்படும் என தெருவித்து வழங்கப்பட்ட கடிதத்திற்கு குறித்த தனியார் கம்பனி 2022.02.02 திகதியிட்டு பதில் கடிதத்தினை வழங்கியிருந்தது.

குறித்த தனியார் கம்பனி 2022.02.02 திகதியிட்டு பதில் கடிதத்தினை வழங்கியிருந்தது. இலங்கை அரசினால் வழங்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட 15MW காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவினில் நறுவிலிக்குளம், உமநகரி, அச்சங்குளம் ஆகிய இடங்களில் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் உரிய அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்றது. இந்த மின்னுற்பத்தித்திட்டத்தை சுற்றுசூழல் அதிகாரசபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவகையிலும் கிராம மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணமும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். என குறித்த கடிதத்தின் ஊடாக மக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னனை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெடர்சியாக 29.7.2023 நாட்டின் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுக்கும், தொடர்புபட்ட அமைச்சுக்கும், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17.07.2023 திகதியிடப்பட்டு அன்னை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு மக்கள் கடிதம் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD காற்றாலை மின் உற்பத்தி கம்பனிக்கு கடிதம், குறித்த கடிதத்தில் தெருவித்திருப்பதாவது…

தங்கள் Hiruras Power Private LTD கம்பனியினால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 15MW WIND POWER PROJECT காற்றாலை மின்சாரத்திட்டம் தொடர்பில் நானாட்டானைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறிப்பாக நறுவிலிக்குளம் மற்றும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்பதை தெருவித்துக்கொள்கின்றேன். காற்றாலைகளினால் உருவாகும் ஒலியை குறித்த பகுதிமக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை அவதானிக்க முடிந்தது. ஒலி பிரச்சனையால் சில குடும்பங்கள் அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என திட்டக்குழு உறுதியளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டமாகும். ஆனால் உண்மையில் காற்றாலை விசையாழிகளால் உருவாகும் ஒலியே இப்போது அந்தப் பகுதியின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

எனவே இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் சவுண்ட் ஃப்ளிக்கர் [SOUND FLICKER] சோதனை செய்து இந்த ஒலியைக் குறைப்பதற்கும் தேவையற்ற தொந்தரவுகள் இல்லாமல் மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ பொருத்தமான தொழில்நுட்ப தீர்வைக் கண்டறியவும். என மன்னார் மாவட்ட செயலாரினால் குறித்த Hiruras Power Private LTD கப்பனிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.