;
Athirady Tamil News

இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

0

18வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? நடந்தது என்ன?

24.08.2023 இன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனியின் முகாமையாளர், பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த காற்றாலை மின் உற்றத்தி செயற்பாட்டில் இரண்டு காற்றாலைகள் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ளபடியினால் அதன் மூலம் எழுகின்ற ஒலிகளினால் தங்கள் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளதாகவும் மன உளைச்சலுக்கு உள்ளகியுள்ளதாகவும் எதிர்காலத்தின் ஏற்படவுள்ள செவித்திறன் பாதிப்புக்கள் மற்றும் ஏனைய பாதிப்புக்கள் குறித்தது அச்சப்படுவதாக மக்கள் தெருவித்தனர். குறித்த HIRURAS POWER PVT.LTD காற்றாலை கம்பனியின் பணியாளர் சத்தம் ஒலி இவ்வாறு ஏற்படும் என தங்களுக்கு முன்னர் தெரியாது எனவும் இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. மக்கள் சார்பில் இரவில் 8மணிதொடக்கம் காலை 8 மணிவரை குறித்த இரண்டு காற்றாலைகளை நிறுத்திவைக்கும் படியும் அல்லது இரண்டு காற்றாடிகளையும் முற்றாக நிறுத்திவைக்கும் படி மக்கள் கேட்டனர். நானாட்டான் பிரதேச செயலாளர் அவர்கள் கூறும் போது மக்கள் கோரிக்கை நியாயமாகவுள்ளபடியினால் 1 மாத காலத்துக்குள் இதனை சரிசெய்யுமாறும் அல்லது நிறுத்திவைக்கும் படி பிரதேச செயலாளரினால் குறித்த 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனிக்கு மக்கள் ஒப்புதலுடன் கோரப்பட்டது.

பிரதேச செயலாளர் மூலமாக இலங்கை மின்சார சபைக்கு குறித்த தனியார் கம்பனி இணங்கிய மின்சாரத்தின் அளவை குறித்த பிரச்சனையினை சீர்செய்யும் வரைக்கும் வழங்கமுடியாதுள்ளது என்பதனை மக்கள் சார்பில் வழங்குமாறு குறித்த 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] தனியார் கம்பனி நிர்வாகத்தினால் கேட்டதற்கு இணங்க பிரதேச மக்களினால் கடிதம் ஒப்பமிட்டு வழங்கப்பட்டது.

குறித்த கம்பனியினால் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள், தாங்கள் உள்ள காலத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெருவித்தனர். இதுதொடர்பாக கூறியமக்கள் தமக்கான தீர்வினை [குறித்த இரண்டு காற்றாலைகளை நிறுத்திவைக்கும் படி] முதலில் நிறைவேற்றுமாறும் பின்னர் எதிர்காலதிட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக கரிசனை கொள்ளமுடியும் எனவும் கூறினார்கள்.

இது தொடர்பான முன்னனைய முழுமையான செய்திகள் பார்வையிடுவதற்கு

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.