;
Athirady Tamil News

கால்பந்தாட்ட மைதானத்தில் சுற்றித்திரியும் பாம்புகள்; அச்சத்தில் மக்கள்!

0

பதுளை, வின்சென்ட் டயஸ் விளையாட்டு மைதானத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாகப்பாம்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இதனால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக மைதானத்தை பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மைதான பணியாளர்கள் கோரிக்கை
அண்மையில் மைதானத்தில் இரண்டு பாம்புக்குட்டிகள் மீட்கப்பட்டதாக மைதான பணியாளர்கள் தெரிவித்தனர். அதோடு கால்பந்தாட்ட மைதானத்தின் புல்வெளிப் பகுதியில் இருந்தும் நாகப்பாம்பு ஒன்று அகற்றப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

மைதானத்தில் குப்பைகள் உள்ள பகுதியில் இந்த பாம்புகள் இனப்பெருக்கம் செய்து வாழ்வதாக மைதான பணியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

வின்சென்ட் டயஸ் மைதானத்தை அன்றாடம் பெருமளவிலான மக்கள் பயன்படுத்துகின்றதால் மக்களின் பாதுகாப்பிற்காக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.