;
Athirady Tamil News

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண்

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உக்கிர மோதலில் காயமடைந்த இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலைில் பணியாற்றிய அனுலா ஜயதிலக்க என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை பெண்
இஸ்ரேலில் வயதான பார்வையற்ற பெண்ணை அனுலா பராமரித்து வந்துள்ளார்.

அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர்கள் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.

அனுலா எனது மறைந்த அத்தை அலிசாவின் பராமரிப்பாளராக இருந்தார். அர்ப்பணிப்பு மற்றும் அன்பான இதயத்துடன், வீட்டில் உள்ள பூனைகளையும், அநேகமாக பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் கவனித்துக்கொண்டார்.

தாக்குதலில் பலி
என் அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் கிப்புட்ஸ் பீரியில் தொடர்ந்து வசித்து வந்தார்.

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண் | Israel War Sri Lanka Women Death

இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.