;
Athirady Tamil News

உடலில் ஹிமோகிளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த மாதிரி உணவுகள் போதும்

0

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது.

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தால், அது உடல் பலவீனம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஹிமோகிளோபின் அளவை அதிகரிக்க அன்றாட சாப்பிடும் உணவுகளை உணவுகளை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரும்புசத்து நிறைந்த உணவுகள்
கீரைகள், நட்ஸ், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளன. இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

மேலும் இந்த வகை உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

அதோடு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இரும்பு பாத்திரங்களில் உணவுகளை சமைத்து உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட இரும்புச்சத்து சிக்கன், ஈரல், மண்ணீரல், ப்ராக்கோலி, முட்டை மஞ்சள் கரு, இறால், உலர் திராட்சை, பேரிச்சம் பழம், பசலைக்கீரை, தர்பூசணி, பூசணி விதைகள் போன்றவற்றிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.

வைட்டமின் சி உணவுகள்
இரும்புச்சத்து முழுமையாக கிடைக்க உடலில் வைட்டமின் சி இருக்க வேண்டும். எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள், இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய் போன்றவற்றில் உள்ளன.

வைட்டமின் பி9 உணவுகள்
இரத்தத்தில் ஹிமோகிளோபின் அளவை அதிகரிக்க வைட்டமின் பி9 சத்தும் முக்கிய பங்கை வகிக்கிறது.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகமாக இருந்தால் தான், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

இந்த வைட்டமின் பி9 பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், வெண்டைக்காய், பீட்ரூட், பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ், அவகேடோ, ப்ராக்கோலி, அஸ்பாரகஸ் போன்றவற்றில் அதிகமாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.