;
Athirady Tamil News

மர்மமாக இறந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்: 2 வாரங்களுக்கு பின் இறுதி கிரியைகள்

0

ரஷ்ய சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதி கிரியைகள் நேற்று (1) நடைபெற்று வருகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதலாவது அரசியல் எதிரியான அலெக்ஸி நவால்னி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு இறுதி கிரியைக்களுக்காக இன்று அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அலெக்ஸி நவால்னியின் மரணம்

அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 16 ஆம் திகதி சிறையில் உயிரிழந்ததாக ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது.

இதையடுத்து, அவரது மரணத்துக்கு விளாடிமீர் புடினே காரணம் என நவால்னியின் மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் உடல் இரசாயன ஆய்வுகளுக்காக இரண்டு வாரங்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

அலெக்ஸி நவால்னியின் இறுதி கிரியைகள்
இதையடுத்து, இன்று அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நண்பகல் 2 மணிக்கு மொஸ்கோவில் உள்ள ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து,(ரஸ்ய நேரம்) மாலை 4 மணிக்கு அலெக்ஸி நவால்னியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் இறுதிக்கிரியைகளை பங்கேற்பதற்காக அதிகளவான மக்கள் குறித்த ஆலய வளாகத்தில் குவிந்துள்ளதையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.