இஸ்ரேல்,ஈரான் போர் எதிரொலி : மூன்றாவது உலகப்போர் வெடிக்குமா..!

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், உலகம் முழுவதும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் மூன்றாம் உலகப்போராக மாற்றமடையலாம் என உலகநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இரு நாடுகளும் தற்போது மோதிக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலஸ்தீன பிரச்சனைதான். இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு மறைமுகமாக உதவி செய்த நாடுகளில் ஒன்று ஈரான்.
பலஸ்தீனத்தின் மீது இடைவிடாது தாக்குதலை
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக பல உலக நாடுகளின் வேண்டுகோளை எல்லாம் புறந்தள்ளி, பலஸ்தீனத்தின் மீது இடைவிடாது தாக்குதலை நடத்தி வந்தது இஸ்ரேல். ஆரம்பத்தில் பலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கைவிடக் கோரிய ஈரான், ஒரு கட்டத்தில் கடுப்பாகித்தான், ஹமாஸ் அமைப்புக்கு மறைமுகமாக ராணுவ உதவிகளைச் செய்யத் தொடங்கியது.
இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் ஈரானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு நேரடியாகவே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களத்தில் குதித்தது. இதனால், சூடாகிப் போன இஸ்ரேல், தனக்கு அண்டை நாடான சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வஞ்சம் தீர்த்துக் கொண்டது.
இஸ்லாமிய படைகளை வழிநடத்திய முக்கிய தளபதிகள் படுகொலை
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய படைகளை வழிநடத்திய முக்கிய தளபதிகள் இருவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலியானதால் கொதித்துப் போனது ஈரான். இதையடுத்து, இஸ்ரேல் – ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் அதை தொடங்கி வைத்தது ஈரான்.
300 அதிபயங்கர ஏவுகணைகளை ஏவி
அடுத்தடுத்து 300 அதிபயங்கர ஏவுகணைகளை ஏவித் தாக்குதலை நடத்தியது ஈரான். இஸ்ரேலும் இதை எதிர்பார்த்திருந்ததால், அயர்ன் டோம் உதவியுடன் உடனடியாக பதிலடி தாக்குதலை தொடங்கிய நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானிய ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தும் நடவடிக்கையை தொடங்கியது அமெரிக்கா.
இவ்வாறு 99 சதவீத ஏவுகணைகளை இஸ்ரேலும், அமெரிக்காவும் அழித்தொழித்தாலும், எஞ்சிய ஒரு சதவீத ஏவுகணைகளை வெடிக்க வைத்தது ஈரான். இதனால், இஸ்ரேலின் பல நகரங்களில் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதோடு, மின் தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தங்கள் ராணுவத்தின் ராடர் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை ஈரான் ஹேக் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது இஸ்ரேல்.
இவற்றுக்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளது.
இதனால், சிரியாவும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் குதிக்க வாய்ப்புள்ளதால், இது மூன்றாவது உலகப் போராக மாறும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றன உலக நாடுகள்.