;
Athirady Tamil News

19 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி! இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்

0

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராக்கெட் தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் 19 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் வணிக மையத்தை குறிவைத்து செவ்வாய்க்கிழமை இரண்டு ராக்கெட் தாக்குதலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்தியுள்ளனர்.

மே மாதத்திற்கு பிறகு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினரின் முதல் தாக்குதல் இதுவாகும்.

இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவலில், பொதுமக்கள் மீதான சியோனிச (Zionist )படுகொலைகள் மற்றும் எங்கள் மக்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மீது இரண்டு M90 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் எதுவும் இல்லை
காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் ஒன்று கடலில் விழுந்ததாகவும், மற்றொன்று இஸ்ரேலிய பிராந்தியத்தை அடையவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.