;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1754698.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

42 வினாடிகளில் தீர்ந்துபோன ரயில் டிக்கெட்; 2,000 ரூபா டிக்கெட் 16,000 ரூபாவுக்கு விற்பனை!

0

இலங்கை மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல செல்லும் ரயில் பயணச்சீட்டுக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து பயணச்சீட்டுக்களும் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் , ரயில் பயணச்சீட்டுக்கள் விற்பனை பாரியளவில் மோசடி நடைபெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

42 வினாடிகளில் விற்கப்பட்ட டிக்கெட்
கண்டியில் நேற்று (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து இணையவழி பயணச்சீட்டுகளையும் குறித்த குழுக்கள் வாங்கி, 2,000 ரூபா பெறுமதியான டிக்கெட்டை வெளிநாட்டினருக்கு 16,000 ரூபாவுக்கு விற்பனை செய்யும் குழுக்கள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் எல்ல ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு இந்த மோசடிகள் நடைபெற்று வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மோசடி கணினிகள் தொடர்பான சிறப்பு அறிவைக் கொண்ட ஒரு நபர் அல்லது குழுவால் இது மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிக விலைக்கு பயணச்சீட்டுக்களை வாங்குவோர் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் தெரிவிப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.