ரஷ்யா, சீனாவை கண்காணிக்க Blue Whale ட்ரோன்களை இயக்கும் ஜேர்மனி

பால்டிக் கடலில் ரஷ்யாவை எதிர்க்க ஜேர்மனி Blue Whale எனும் ஆழ்கடல் ட்ரோன்களை இயக்குகிறது.
ஜேர்மன் கடற்படை, பால்டிக் கடலில் ரஷ்யா மற்றும் சீன நாசவேலை நடவடிக்கைகளை எதிர்க்க புதிய முயற்சியாக “ப்ளூ வேல்” என்ற ரகசிய ஆழ்கடல் ட்ரோனை அனுப்பியுள்ளது.
உயர் தொழில்நுட்ப வசதிகள்
இஸ்ரேலின் Elta நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 36 அடி நீளமுள்ள ப்ளூ வேல் ட்ரோன், சுமார் 300 மீட்டர் ஆழத்தில் வேலை செய்யும் திறனுடன், பல வாரங்கள் வரை நீருக்குள் செயல்படக்கூடியது.
இது கேபிள் வெட்டு, மைன்கள் மற்றும் சந்தேகமான கப்பல்களை கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது.
அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள்
ப்ளூ வேலின் Synthetic Aperture Sonar தரையினை ஸ்கேன் செய்து மைன்களை கண்டறிய உதவுகிறது.
இதிலுள்ள, Flank Array Sonar சாதனம் மற்ற கப்பல்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
மேலும், Loyal Submarine Wingman தொடர்பு தொழில்நுட்பம் மூலம் இரகசிய விசாரணைகளுக்கு ஆதரவளிக்கிறது.
ரஷ்யா மற்றும் சீன செயல்பாடுகள் மீது கவனம்
நவம்பர் 2023-இல் பின்லாந்து மற்றும் ஜேர்மனி இடையிலான கேபிள்கள் வெட்டப்பட்ட சம்பவம் மற்றும் பால்டிக் கனெக்டர் எரிவாயு குழாயின் சேதம் ஆகியவை சீன கப்பல்கள் வழியாக ரஷ்யாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் உள்ளது.
எனவே, ரஷ்யா மற்றும் சீன செயல்பாடுகள் மீது கவனம் செலுத்துவதற்காவே இந்த ஆழ்கடல் ட்ரோன் இயக்கப்படுகிறது.
இஸ்ரேலுடன் ஜேர்மனி அதிக பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வளர்த்துவருகிறது. ப்ளூ வேல் போன்ற ட்ரோன்கள் மான்யூவல் அமைப்புகளை விட குறைந்த செலவில் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செயல்முறை, ரஷ்யாவின் நாசவேலைகள் மற்றும் சீனாவின் உளவு நடவடிக்கைகளை சமாளிக்க ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.