;
Athirady Tamil News

ஒரு நாளைக்கு 800 டன்கள்.., ஆசியாவின் மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலையை திறந்த பதஞ்சலி நிறுவனம்

0

மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை பதஞ்சலி நிறுவனம் திறந்து வைத்துள்ளது.

மிகப்பெரிய ஆரஞ்சு ஜூஸ் ஆலை
நாக்பூரில் மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை பதஞ்சலி நிறுவனம் திறந்து வைத்துள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய யோகா குரு ராம்தேவ், “இந்த ஆலையில் தினமும் 800 டன்கள் ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கப்படும். இது முழுமையாக இயற்கையானது, சர்க்கரை எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை.

இது, மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பானமாக இருக்கும். அதோடு விவசாயிகளின் தொழிலுக்கும் உதவியாக இருக்கும்.

மேலும், ஆரஞ்சு பழத்தின் தோளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும். இந்த ஆலையில் மொத்தம் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. அதில் ஏற்கனவே ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது ஆசியாவின் மிகப்பெரிய ஜூஸ் மற்றும் உணவு பதப்படுத்தல் ஆலை” என்றார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆலையில் எலுமிச்சை ,நெல்லிக்காய் , மாதுளம் பழம், கொய்யாப்பழம், திராட்சை, கேரட், மாங்காய் ஆகியவற்றில் இருந்து ஜூஸ் எடுக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.