;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு கழகம் மற்றும் கலைக்குழு ஆகியவை இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள்

0

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு ஶ்ரீ வைத்தீஸ்வரா சனசமூக நிலையம், மகளீர் சங்கம், விளையாட்டு கழகம் மற்றும் கலைக்குழு ஆகியவை இணைந்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

வைத்தீஸ்வரா பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு , அப்பிரதேசத்தில் இருந்து கல்வி கற்று, புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.தா சாதரண பரீட்சைகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கும், யாழ் பல்கலைகழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலைமாணி பட்டம் பெற்ற மாணவியையும் கௌரவப்படுத்தி,பதக்கங்கள் அணிவித்து , ஊக்குவிப்பு வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.