இஸ்ரேலின் திட்டத்தால் முஸ்லிம் நாடுகள் அதிர்ச்சி – துருக்கி, எகிப்து கடும் எதிர்ப்பு
காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இஸ்ரேலின் திட்டம், பல முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பை பெற்றுள்ளது.
2023 ஆக்டொபர் 7-ஆம் திகதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் தொடங்கிய இஸ்ரேல்-காசா போர், தற்போது பெரும் மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
200 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டம் – Chetak, Cheetah-களை மாற்ற முயற்சி
200 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டம் – Chetak, Cheetah-களை மாற்ற முயற்சி
காசாவில் தொடரும் குண்டுவீச்சால் 70,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருத்துவ உதவி என அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் உயிரிழந்துவருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, காசா முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது பல முஸ்லிம் நாடுகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, எகிப்து எதிர்ப்பு
துருக்கி வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹாகன் ஃபிடான், முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், எகிப்தும் காசாவை முழு கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிராக கண்டனம் எதிரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் எகிப்து தலைவர்கள் சந்தித்து, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான OIC, இதுகுறித்து அவசர கூட்டம் நடத்தவேண்டும் என பரிந்துரைத்துள்ளன.
இச்சூழல், மத்திய கிழக்கு பகுதியில் புதிய அரசியல் மற்றும் மனிதாபிமான சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.