யாழ்ப்பாணத்தில் ஊட்டச்சத்து, ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு: நாளைய தினம் ஆரம்பம்!
போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு நாளைய தினம்(9.9.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை காலை 9 மணிக்கு குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து போலோ என்கிற ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
போலோ ஆராய்ச்சி நிறுவனத்துடைய தலைவரும் சிறுவர் உரிமைச் செயற்பாட்டாளருமான டாக்டர் சரண்யா இந்நிகழ்வுக்கு தலைமை தாங்குகின்றார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
குடும்பம் மற்றும் சமூகத்தில் வளர்ந்து வரும் சவால்கள்,
குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பில் உலகளாவிய போக்குகள் என பல தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளது.
குடும்பம் மற்றும் குழந்தை உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பாக குழுக் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் நிகழ்வு தொடர்பான பதிவுகள் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.