உத்தரவை மீறிப் பயணித்த கார் ; சுட்டுபிடித்த பொலிஸார்
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த கார் மாத்தறை ஜனராஜ மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரை செலுத்திய சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.