மந்திகை வைத்தியசாலையில் அவலம்: உடைந்த நிலையில் இருக்கும் நோயாளர் இருக்கைகளை சீர் செய்ய கோரிக்கை!
பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்:
வைத்தியசாலையிலுள்ள பல நாட்களாக வெளிநோயாளர் பகுதியிலுள்ள இருக்கைகள் சரி செய்யப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் அதிகளவானோர் இருக்கைகள் இன்றி எழுந்து நின்று பல மணி நேரம் கால்கடுக்க காத்து நின்று வைத்திய தேவைகளை நிறைவேற்றிச் செல்வேண்டியுள்ளது.
எனவே,பல நாட்களாக கேட்பாரற்று உடைந்த நிலையில் காணப்படும் வைத்தியசாலையின் நோயாளர் இருக்கைகளை சீர் செய்ய வைத்தியசாலை நிர்வாகம் முன்வர வேண்டுமென கோரியுள்ளனர்.