பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் நட்டம்; இருவர் மீது பாயும் நடவடிக்கை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விபரங்களை கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.