;
Athirady Tamil News

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு

0

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இராப்போசன ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.