;
Athirady Tamil News

கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்

0
கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண ஆளுநர் கோரியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்
குறித்த சந்திப்பில்,வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.
இவ்வலயங்கள் மாகாணத்தின் முதலீட்டு சூழலை விரிவுபடுத்துவதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என ஆளுநர் தெரிவித்தார்
வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வு, செம்மணி விவகாரம், வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை விடுவிக்கும் செயன்முறை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி, நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

புலம்பெயர் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வுமின்றி நாட்டுக்கு வந்து செல்லக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவித்த ஆளுநர் , முதலீடு, தொழில் முயற்சி, அறிவு மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்க முடியும் என தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.