;
Athirady Tamil News

அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

0

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் நான்கு பத்திரிகையாளர் உள்பட ஆறு பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் அல்-ஜசீரா செய்தியாளர்கள் அனஸ் அல்-ஹெரிப் மற்றும் முகமது குரைகா உள்ளிட்ட 4 பத்திரிகையாளர்கள் மற்றும் 2 பேர் என 6 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் அனைவரும் ஷிபா மருத்துவமனையில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் மருத்துவமனை வளாகத்தின் அவசர பிரிவு கட்டடத்தின் நுழைவாயிலையும் சேதப்படுத்தியது.

இஸ்ரேல் மற்றம் காஸா நகர மருத்துவமனை அதிகாரிகளும் இந்த உயிரிழப்பை உறுதிப்படுத்தினர். இது காஸாவில் போரை ஆவணப்படுத்தியவர்களுக்கு எதிரான பழிவாங்கல் என்று தெரிவித்துள்ளனர். போரின்போது பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் சம்பவம் இதுவாகும்.

காஸாவில் குறைந்தது 186 பத்திரிகையாளர்கள் இதுவரை கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு ஞாயிறன்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.