கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட இளைஞன் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதுடன்,…
வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த ; உறுதிப்படுத்திய நாமல் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா…
கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; 42 பயணிகள் படு காயம்
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள்…
பேருந்தில் வலிப்பு வந்து துடித்த இளம்பெண் மரணம்: மருத்துவர்கள் கண்ட வித்தியாசமான காட்சி
பிரேசில் நாட்டில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு வலிப்பு ஏற்படவே, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.
மருத்துவர்கள் கண்ட வித்தியாசமான…
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளை காணவில்லை! இந்திய மாநிலம் ஒன்றில் பரபரப்பு
மத்திய பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயிருப்பதாக அரசுத் தரவு தகவல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23,000-க்கும் மேற்பட்ட பெண்களை காணவில்லை
மத்திய பிரதேசத்தில் கடந்த ஒரு…
தொடருந்து கழிப்பறையில் புதிதாகப் பிறந்த சிசுவின் சடலம் மீட்பு
கொழும்பு மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று (01) பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிசுவின் வயது சுமார் மூன்று நாட்கள் என…
யாழ். செம்மணி மயானத்திற்கு அருகாமையில் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மட்டக்களப்பில் திடீரென மினி சூறாவளி ; தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்
மட்டக்களப்பில் திடீரென வீசிய மின சூறாவளியால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயம் உள்ளிட்ட…
யாழ். சித்துப்பாத்தி கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ; அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு
சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
கேளிக்கை பூங்காவில் இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்
சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள…
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் வரும்…
குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் – 1 குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு..
குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை சரிவு
மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த சீனா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிந்து வருகிறது.…
பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்
பூமியை நோக்கி பெரிய அளவிலான விண்கல் ஒன்று வந்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என சிலர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் அவ்வபோது…
சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய இந்தியர்களுக்கு குவியும் நன்கொடைகள்
சிங்கப்பூரில் திடீரென சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய புலம்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து கௌரவங்கள் குவிகின்றன.
கடந்த சனிக்கிழமை மாலை, சிங்கப்பூரிலுள்ள Tanjong Katong சாலையில் திடீரென பெரும் சத்தத்துடன்…
சிங்கப்பூரில் பள்ளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய இந்தியர்களுக்கு குவியும் நன்கொடைகள்
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நகைக்கடை ஒன்றிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அடித்துச் செல்லப்பட்டன.
போட்டி போட்டு தேடும் மக்கள்
சீனாவின் Shaanxi மாகாணத்தில் இம்மாதம் 25ஆம் திகதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…
பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?
பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 8 ஆம்…
இந்திய மீனவர்களின் படகுகளால் இடரை எதிர்நோக்கியுள்ள மயிலிட்டி மீனவர்கள்
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களிடம் இருந்து…
செம்மணி சான்று பொருட்களை அடையாளம் காண ஏற்பாடு
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின் ,…
இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்! சவுதி பூங்காவில் பயங்கரம்: வைரல் வீடியோ
சவுதி அரேபியாவில் உள்ள தைஃப் நகரில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில், ஒரு ராட்டினம் திடீரென இரண்டாக உடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்
அல் ஹடா பகுதியில் உள்ள க்ரீன் மவுண்டன்…
மியான்மாரில் அவசரகால நிலை நீக்கம்
மியான்மார் இராணுவத்தினால் 2021 பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள்…
ஊடகவியலாளர் நிலக்சனுக்கு முன்னணியும் அஞ்சலி
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் யாழ் மாணவர் பேரவையின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் இன்று மாலை…
ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ; இந்தியா எதிர்காலத்தில் பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கலாம்!
பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் உடன் இணைந்து எண்ணெய்…
ஓடும் பேருந்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட நபர் ; தமிழர் பகுதியொன்றில் அரங்கேறிய சம்பவம்
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில்…
விமான நிலையத்தில் ஓசிக்கு ஆசைப்பட்ட 7 பேரை அதிரடியாக தூக்கிய ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி அனுரவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க…
ஓகஸ்ட் மாத லிட்ரோ விலை இதோ!
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.…
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (1) கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை…
அவுஸ்திரேலியாவில் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour…
ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட்…
உலகில் யாருக்குமே இல்லாத ரத்த வகை – இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்
பொதுவாக மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிட்டிவ் மற்றும் ஏ நெகட்டிவ் என 48 ரத்த வகைகள் உள்ளது.
இதில் சில ரத்த வகைகள் மற்றும் உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். மற்ற ரத்த வகைகள் அரிதாக சிலருக்கே இருக்கும்.
48 வது ரத்த…
வண்ணமயமான புத்தாக்கங்களுடன் உடுப்பிட்டி இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் ஆக்கத்திறன்…
யாழ்ப்பாணம் - வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்பள்ளியில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட உடுப்பிட்டி விநாயகா…
கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி ; அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இறைவரித் திணைக்களம்
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பியூமி ஹன்சமாலி 2022…
இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிராக மன்னாரில் போராட்டம்
பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க
மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை…
செம்மணி மனித புதைகுழி அகழ்வை நேரில் பார்வையிட்ட சிறிதரன்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில், கட்டம் கட்டமாக 35 நாட்கள்…
வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!
வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச நாட்டில், 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் 20,980 டெங்கு பாதிப்புகள் உறுதி…