;
Athirady Tamil News
Daily Archives

16 June 2025

துருக்கியில் வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து

மத்திய துருக்கியில் உள்ள அக்சரய் மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக்காற்று பலூன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த…

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாக பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லைக்குள்…

இஸ்ரேல் – ஈரான் அமைதியின்மை எம்மில் ஏற்படுத்தும் தாக்கம்

ச.சேகர் மத்திய கிழக்கில் நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பதட்ட நிலை, கடந்த வாரத்தின் பிற்பகுதி முதல் மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் வெள்ளிக்கிழமை முதல் பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்ற…

1,000 உக்ரைன் போர் வீரர்கள் உடல்கள் ஒப்படைப்பு: ஜெலன்ஸ்கி மீண்டும் தடைகளுக்கு அழைப்பு

சமீபத்திய போர் கைதிகள் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்களின் உடல்களை கீவ் பெற்றுள்ளது. இந்த முன்னேற்றத்துடன், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும்…

இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை மழை… மகனின் திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர் நெதன்யாகு

ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணக் கொண்டாட்டத்தில் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நெதன்யாகுவின் மகன்…

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் ; போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என , வெளியான செய்தி தொடர்பாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட…

போர் முனையில் சிக்கிய பிரித்தானியர்கள்… வெளியேற வாய்ப்பில்லை என ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து வெளியேற்றுவது தற்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய குடிமக்கள் போர் முனையில் சிக்கிக்கொண்டுள்ளனர். 60,000 பிரித்தானியர்கள் ஈரானின் தொடர்ச்சியான உக்கிரத்…

தானியங்கி கேட்டில் சிக்கி பரிதாபமாக பலியான நபர்

பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார். தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி இந்த நபர் இறந்ததாக…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை மண்சரிவு அபாய எச்சரிக்கையை இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. நிலை 01 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை…

நாடு கடத்தலை தொடங்கிய ஜெர்மனி; அச்சத்தில் இலங்கையர்கள்!

ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு விதிவிட இல்லாது…

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச்…

இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தோடு இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற மகன் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்

புதுடெல்லி: இந்தியாவில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு லண்டனுக்கு திரும்பி சென்றபோது மகனும் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ள பெரும் சோகமாக மாறியுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில்…

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில்…

இளையோரை ஏமாற்றிய மட்டக்களப்பு மருத்துவரின் மோசமான செயல்

மட்டக்களப்பு கிராண் பகுதியில் மருந்தகம் நடத்தி வந்த மருத்துவர் ஒருவர், மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்து ஆய்வாளர்கள் மற்றும்…

ஆரம்பமாகவுள்ள கொழும்பு – யாழ்ப்பாணம் விமான சேவை

கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கான, விமானக் செயல்பாட்டுச் சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் , டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு…

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்த்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற…

நீண்ட நாள் சோனம் தலைமறைவாக இருக்க ஆன்லைனில் மளிகை ஆர்டர் செய்த காதலன்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ்…

இஸ்ரேல் தாக்குதலில் பதுங்கு குழியில் ஈரானின் தலைவர் அலி கமேனி

இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானின் உயர்மட்ட தலைவர் அலி கமேனி வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் லாவிசான் என்ற பகுதியில் உள்ள ஒரு…

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய…

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம்…

அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “ஜூன்…

நெடுந்தீவு முச்சக்கர வண்டி விபத்து: பாதசாரி பலி

நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

கோப்பாயில் போதையில் கைக்கலப்பு – ஆட்டோவும் கொள்ளை

கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபாண சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மதுபான சாலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக்…

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள், புகைப்படங்களை…

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! வீடு, சைக்கிள்,…

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! வீடு, சைக்கிள், சங்கு அனைத்தும் ஓரணியில்.. நடந்தது என்ன?? (முழுமையான படங்கள்) வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை…

போதை வியாபாரியின் வாக்கு மூலத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட போதை வியாபாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கடந்த வாரம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட…

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் – 06 ஆயிரத்திற்கும்…

வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்…

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு யாழ்.பல்கலை மாணவர்களையும் அனுமதியுங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மனித புதைகுழி காணப்படும் நிலையில் ,…

குடும்ப பெண்ணின் உயிரை பறித்த கோர விபத்து ; இரவில் நடந்த சோகம்

மினுவாங்கொடை - வெயாங்கொடை வீதியில் பமுனுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடையிலிருந்து வெயாங்கொடை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த வேன் மீது…

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் பலி: ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தை வழிநடத்திய மூத்த ராணுவ…

குஜராத் விமான விபத்து வீடியோவை தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர்…

விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூபானியின் டிஎன்ஏ மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை…

ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளாக மூடல்!

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.…

மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள காணி மற்றும் புகையிரதம் செல்லும் ஓட்டமாவடி…