;
Athirady Tamil News
Yearly Archives

2025

வெளிநாடு செல்வதற்காக தமிழ் இளைஞன் செய்த மோசமான செயல்!

இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மும்பைக்குச் செல்லவிருந்த 29 வயதான குறித்த…

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார். 1943ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி…

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து…

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம்…

காஸா போர்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 68 பேர் பலி!

காஸாவில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காஸாவில் பரவலாக நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் பாலஸ்தீன மக்கள் 68 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) சுமார் 50-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் வான்வழி…

A1 ஊடாக உருமாற்றப்படும் செம்மணி மனித எலும்புகள் – கடும் எச்சரிக்கை: பாயவுள்ள சட்டம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை A1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஊடகங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் போதே செம்மணி மனித புதைகுழி…

எரிபொருள் விலை மாற்றம்: பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

நேற்றைய எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகியான…

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு…

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின்பகுதியளவு இடிந்து விழுந்தது. அப்போது…

ஈரானில் முடக்கப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரானிய அரசு முடக்கியுள்ளது. ஈரானுக்குள் இஸ்ரேலின் மொஸாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும்…

ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி – அரிய நோயால் அவதிப்படும் இளம்பெண்

பெண் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 15 முறை வாந்தி எடுக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சாப்பிட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளாதது, அல்லது பயணங்களின் போது சிலருக்கு வாந்தி(Vomit) வருவது வழக்கம். ஆனால், இளம்பெண் ஒருவர், ஒரு மணி…

பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்., 3.4 பில்லியன் டொலர் சீனா கடனுதவி

நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா 3.4 பில்லியன் டொலர் கடனுதவி செய்துள்ளது. பாகிஸ்தானின் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க, அதன் "இரும்பு கூட்டாளி" சீனா, 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கொடுத்து உதவியுள்ளது. இந்த நிதியுதவி…

கனடாவில் தொழிலுக்காக நீண்ட வரிசை ; வைரலான இந்தியப் பெண்ணின் வீடியோ

கனடாவில் சாதாரண தொழிலுக்கு கூட, நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் காணொளியொன்றை அங்குள்ள இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது…

1965: புதிய அரசாங்கமும் புதிய கொள்கைகளும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1960களின் தொடக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் முழுமையான தொழில் மயமாக்கலுக்கு முயற்சித்தது. இலங்கையின் தொழில் மயமாக்கலுக்கு இரண்டு முக்கிய வரம்புகள் இருந்தன. முதலாவது, நீர் மின்சாரம் இரண்டாவது,…

யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி

அநுராதபுரத்தில் மகாவிலாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேமடுவ பகுதியில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 10 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று…

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் ; உக்ரைன் விமானி பலி

உக்ரைன் மீது 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா நேற்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதில் ஒரு உக்ரைனிய F-16 போர் விமானி உயிரிழந்துள்ளார் இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் லிவிவ், பொல்டாவா, மைக்கோலாய்வ்,…

தேங்காய் எண்ணெக்கு பதில் பெட்ரோல் ; விளக்கு ஏற்றும் போது நேர்ந்த விபரீதம்

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடொன்றில் தீடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெட்ரோலை பயன்படுத்தியமையால் இந்த…

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள…

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது – கடற்தொழில் அமைச்சர்…

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது. அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

போதைப் பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

போதைப் பொருள் பாவனை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு திங்கட்கிழமை (30) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர்…

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க…

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட 22 மாணவர்கள் ; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி…

பேருந்தின் சில்லுக்குள் சிக்கி சிறுவன் பரிதாப உயிரிழப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30)…

காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் ; கைதானவர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

குருணாகலில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் இருந்து தீயில் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று (29) கைது…

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதில் இருந்து…

ஜார்க்கண்டில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 162 பேர் மீட்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் காற்று…

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை…

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவானார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச சபை சபா…

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Qயாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இந்த இளம் குடும்பஸ்தர் கடந்த 27 ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் தெல்லிப்பழை…

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்த முதியவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது என்று வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்றபோது.…

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகிறது. இதில் வடமேற்கில் உள்ள…

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதாவை அதிபா்…

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம் – தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்த பல்கலைக்கழகம்

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகத்தை, தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அங்கு…

யாழில். குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று இளநீர் பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று அங்கு பூசாரி வழங்கிய இளநீரை பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். குடும்பஸ்தர்உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி…

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் கடந்த…