;
Athirady Tamil News
Daily Archives

5 September 2026

சூடான்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி

கார்டூமின், சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல்…

கோடிக்கணக்கான சொத்துகளை விட்டுவிட்டு சாமியாராகிறார் பிரபல தொழிலதிபர்..!

பாங்காக், பணம் மற்றும் புகழ் மட்டுமே வாழ்க்கையில் முழுமையான நிம்மதியைத் தந்துவிடாது என்பதை உணர்த்தும் வகையில், தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விட்டுவிட்டு துறவறம் செல்ல முடிவு…

போலாந்து: தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது மோதிய ரெயில் – வைரல் வீடியோ

வார்சா, போலாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போலாந்து. இந்நாட்டின் கடன்ஸ் நகரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை வாகனங்கள் கடக்க…

இலங்கையில் நெடுந்தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

இலங்கையில் நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து,…

பிறப்புறுப்பு திருட்டு: சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி.. 80-க்கும் மேற்பட்டோர் அடித்து கொலை?

டோடோமா, 'பிறப்புறுப்பு திருட்டு' குறித்த பொய்யான வதந்திகளால் ஆப்ரிக்க நாடுகளில், 80க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கும்பல் தாக்குதல் சமூக ஊடகங்களில் பரவிய "பிறப்புறுப்பு…

நைஜீரியா: கச்சா எண்ணெய் திருட முயன்ற 37 பேர் விஷவாயு தாக்கி பலி!

நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்ற 37 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள கச்சா எண்ணெய் கட்டமைப்புகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படும் பைப்…

தமிழர் பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்; அநியாயமாக பறிபோன பிஞ்சின் உயிர்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக குழந்தை வாகனச் சக்கரத்தில் நசியுண்டு…

யேமனில் அரசுப் படைகள் – ஹௌதிகள் இடையே கடும் மோதல்! 2 நாள்களில் 81 பேர் பலி!

யேமனின் அரசுப் படைகளுக்கும், அந்நாட்டின் கிளர்ச்சிப் படையான ஹௌதிகளுக்கும் இடையேயான மோதல்களில் 81 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனின் செங்கடலையொட்டியுள்ள பகுதிகளிலும், தயீஸ் மாகாணத்திலும் அரசுப் படைகளுக்கு எதிராக ஹௌதிகள்…

தமிழ் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை ஏதிலிகள்!

தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி…

நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச்…

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!

ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான 6 மாதகாலப் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை…

டிரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிதான் முதலாவதாக இருப்பார் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நட்பு…

தாங்க முடியாத பணிச்சுமை; வேலையைவிட்ட OIC!

கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவியை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிடைத்த தகவல்களின்படி, அப்பிரிவு…

குடமுழுக்கு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வரும் நித்யானந்தா?

புதுச்சேரி, புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்-மந்திரி ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர். தியான பீட…

தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; விலை குறைப்பு

நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும்,…

4 பிரதேசங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (05) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை…

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்

யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026' இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.   நல்லூர் ஆலயத்தை…

கியூபாவில் புதிய பொருளாதார சீா்திருத்தங்கள்

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், அந்நிய முதலீடுகள், வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஈா்க்கும் நோக்கில் புதிய தாராளமய சீா்திருத்தங்களை கியூபா அரசு வெளியிட்டுள்ளது. கியூபாவின் அதிகாரபூா்வ அரசிதழில்…

உயிர் பிழைத்தது எப்படி? 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய…

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார். நிச்சயம்…

அல்லைப்பிட்டியில் உயிரை பணயம் வைத்து தீயை அணைத்த ஊர்காவற்துறை பொலிசார்

நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் தீவகம் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் பிரதான வீதியில் காணப்படுகின்ற நண்டு ஏற்றுமதி நிறுவனத்தின் அருகில் காணப்படுகின்ற பல காணிகள் விசமிகளால் தீ மூட்டப்பட்டு அந்த பிரதேசம் முழுவதும் தீ பரவத்தொடங்கியிருந்த நிலையில்…

கேரளாவில் பாலியல் வழக்கால் வாழ்க்கையை தொலைத்த 3 கன்னியாஸ்திரிகள் புதிய அத்தியாயத்தை…

கோட்​ட​யம்: பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்​டப் போராட்​டத்தை எதிர்​கொண்ட 3 கன்​னி​யாஸ்​திரி​கள் சிறிய ஆடைத் தொழில் மூலம் தங்​களது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர். கேரளா​வின், கோட்​ட​யம் மாவட்​டத்​தி​லுள்ள…

இத்தாலியின் நீண்ட கால பிரதமா்: மெலோனிக்கு பிரதமா் மோடி வாழ்த்து

உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடா்ச்சியாகப் பிரதமா் பதவியை வகித்தவா் என்ற பெருமையை எட்டியுள்ள ஜாா்ஜியா மெலோனிக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு…

இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை!

இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை விபரம், இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம்…

நல்லூர் சந்தானகோபாலர் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி  ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம்  பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - ஐ. சிவசாந்தன்

இந்தியாவிடம் எந்தவித இழப்பீடும் கோரவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் விளக்கம்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, காலநிலை தொடர்பான பேரிடர் இழப்பீடு கோரப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால், தனது அண்டை நாடான இந்தியா உள்பட எந்தவொரு…

டெல்லி விமான நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நீர் தேக்கம் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம்…

வவுனியா மாநகரசபைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை: வடக்கு ஆளுனர்

வவுனியா மாநகரசபைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை: வடக்கு ஆளுனர் வவுனியா விசேட நிருபர் வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…

நாடு கடத்துதல், எல்லைச் சுவர் அமைத்தல்! வெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோ கேம்கள்!

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிரம்ப் அரசின் கொள்கைகள் விடியோ கேம்கள் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 விடியோ கேம்கள் புதிதாக…

இந்தியாவுக்காக தங்கம் வென்றவர் காய்கறி விற்கும் அவலம்

இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமர்தீப்குமார்(வயது 29), சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்க…

டின் மீன்களின் விலை தொடர்பில் விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்நாட்டு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று(05.09.2026) வெளியாகியுள்ளது. டின் மீன்களின் விலை அதிகரிப்பு 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க…

தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரை பறித்த சம்பவத்தால் பரபரப்பு ; கொந்தளிப்பில் மக்கள்

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில்…

வலி. வடக்கு: காணிகளை விடுவிக்கக் கோரி 20ஆவது வாரமாக இராணுவப் பங்களா முன் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில்…

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீள பெறுங்கள்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த…

நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா்கள் 275 போ் உள்பட 4,798-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை 10-ஆவது…