;
Athirady Tamil News

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

0

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும்.

ஆகவே நெருக்கடிக்கு மத்தியிலும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலாநிதி ஜயம்பக்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை குறைத்து, பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்களை கையாளக்கூடிய நிபுணர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அமைச்சரவையுடன் இணைத்து இன்றைய நிலைமைகளை கையாள வேண்டும்.

அதுவே இன்றைய நிலைமைகளில் இருந்து மீள இருக்கும் சிறந்த வேலைத்திட்டமாகும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க இப்போதும் எம்மிடம் மாற்று வேலைத்திட்டங்கள் உள்ளன. அவற்றை கையாள தாமதிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றில் ராஜபக் ஷவினர் சுயமாக ஆட்சியை விட்டு வெளியேறினால் அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து ஆராய்ந்து புதிய பயணம் ஒன்றினை முன்னெடுக்க முடியும். அல்லது பாராளுமன்றத்தில் இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்கட்சிகள் மற்றும் சுயாதீன அணியினர் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும். அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டுவருவது இலகுவான காரியம் அல்ல.

அதற்கு நீண்ட காலம் எடுக்கும். குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டாள் அரைவாசிப்பேர் கையொப்பமிட வேண்டும் அல்லது மூன்றில் ஒரு தரப்பு கையொப்பமிட்டால் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதை சபாநாயகர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். அதுமட்டுமல்ல ஜனாதிபதி தெரிந்தே அரசியல் அமைப்பை மீறியுள்ளார், அல்லது அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டுள்ளார் என நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லது ஒரு சில பலவீனம் காரணமாக ஜனாதிபதியினால் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இவை இலகுவாக செய்து முடிக்க முடிந்த விடயங்கள் அல்ல.

எனவே நாட்டின் பொதுவான கோரிக்கைக்கு செவி மடுத்து மக்களின் ஆணை என்ன என்பதை கருத்தில் கொண்டு தாமாக பதவி விலக வேண்டும். அரசாங்கமும் பலமிழந்துவிட்டது.

சர்வதேசத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆகவே பலமிழந்த அரசாங்கத்துடன் இனியும் எவரும் கலந்துரையாட மாட்டார்கள். எனவே இருக்கும் சிறந்த தெரிவு என்னவென்றால் அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும்.

மாற்று அரசாங்கம் ஒன்றினை தற்காலிகமாக உருவாக்கி குறுகிய அமைச்சரவையை உருவாக்கி நிபுணர்களுடன் இணைந்து இயங்கக்கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கி பயணிக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, பொறுப்புக்கூறல் விடயங்கள், நல்லிணக்க விடயங்கள், ஜனநாயகத்தை பலப்படுத்தும் விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதே இன்றைய நெருக்கடியை தீர்க்க இருக்கும் தெரிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!!

சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் !!

சந்திரிக்கா – சஜித் விசேட கலந்துரையாடலில்!!

பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !!

ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.