;
Athirady Tamil News

கணினி உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷியா…!!

0

ரஷியா உக்ரைன் போர் 70 நாட்களாக நடைபெற்று வருகிறது.

உக்ரைனின் பல நகரங்களில் முற்றுகையிட்டுள்ள ரஷியா ஒவ்வொரு பகுதியாக பிடித்து வருகிறது. உக்ரைன் மக்கள் பலரும் ரஷியாவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷியா உக்ரைன் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ முயற்சித்து வருவதாகவும் உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அதேசமயம் உக்ரைனும் தொடர்ந்து ரஷியாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவியால் உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து ரஷிய வீரர்களை தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய ராணுவம் கணினி உதவியுடன் கூடிய உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஒரே ஏவுகணை மூலமும், பலதரப்பட்ட ஏவுகணைகள் மூலமும் அணு ஆயுத தாக்குதல்களை தங்களது எதிரிகளில் நிலப்பரப்புகளின் மீது எப்படி நிகழ்த்தலாம் என கணினியின் உதவியுடன் உருவகப்படுத்தப்பட்ட காட்சி அமைப்பில் இந்த பயிற்சி நடைபெற்றது. அதேபோல தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி தடுத்து முன்னேறலாம் என்ற வகையிலும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று அணு ஆயுத தாக்குதல் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மற்றும் ரசாயன ஆபத்துகளில் எப்படி செயலாற்ற வேண்டும் என்றும் ரஷியா பயிற்சி செய்தது.

இந்த பயிற்சியில் 100 பேர் கலந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியின் மூலம் மேற்கத்திய நாடுகள் நேரடியாக போரில் இறங்கினால் எவ்வாறு பதிலடி கொடுக்கலாம் என்றும் ரஷியா திட்டமிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.