’ஜனாதிபதி – அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும்’ !!

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் இலங்கை மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.