’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !!
பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கூறும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப் பதவிகளுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஆளும், எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஒன்றாக செயற்படுவோம். ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை ஜனாதிபதியும், பிரதமரும் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை வங்குரோத்த நிலைக்கு தள்ளப்பட்ட நாடென்ற பெயரை பெற்றுவிட்டது. கடந்த வாரத்தில் முள்ளிவாய்க்கலில் நினைகூரல் இடம்பெற்றபோது இராணுவத்தினர் அதனைத் தடுத்தார்கள். தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே அனைத்து மக்களும் ஒன்றுகூடி நினைக்கூருகிறார்கள்.
நேற்று காலிமுகத்திடலில் அனைவரும் ஒன்றிணைந்து புலிகள், இராணுவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்தார்கள். இதுவே மாற்றம் எனவும் தெரிவித்தார்.
IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)
கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)
அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!
போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!
’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!
ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!