பந்தாடப்பட்ட ஜீ.எல். பீரிஸ்! அமைச்சுப் பதவி பறிபோனது !!

வெளிநாட்டலுவல்கள்அமைச்சராக முன்னர் கடமையாற்றிய ஜீ.எல்.பீரிஸ் இம்முறை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவரது பதவி இன்று(22) பறிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரை ஜீ.எல்.பீரிசுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியொன்றைக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியினால் முன்மொழியப்பட்ட போது ஜீ.எல். பீரிஸ் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் அதனை எதிர்த்துள்ளார்.
அத்துடன் சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு டலஸ் அழகப்பெருமவை முன்மொழிந்தபோது அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்துள்ளார்.
இதன் காரணமாக அவருடைய கட்சித் தவிசாளர் பதவி பறிபோகும் என்றும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அண்மையில் பொதுஜன பெரமுண கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் எச்சரித்துள்ளார்.
ஜீ.எல்.பீரிஸின் பங்களிப்புக்கள்
நல்லாட்சி அரசாங்க காலத்தில் ராஜபக்ச தரப்பினர், மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுண கட்சியின் தவிசாளர் என்ற பதவியில் இருந்து கொண்டு கட்சியை கட்டியெழுப்புவதில் ஜீ.எல்.பீரிஸ் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனம் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.