;
Athirady Tamil News

குண்டும் குழியுமான சாலைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்: ரோட்டோரமாக மது குடிப்பதால் மாணவிகள்-பெண்கள் அச்சம்!!

0

ராயபுரம் பகுதி கிழக்கு கல்மண்டபம் சாலை, ஜே.பி.கோவில் தெரு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் மழை நீர் வடிகால் வாய் பணி நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடாமல் உள்ளது. இதனால் உட்பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதே போல் புது வண்ணாரப்பேட்டை பகுதி பூண்டி தங்கமாள் தெரு, வண்ணாரப்பேட்டை பகுதி ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோடு, தங்க சாலை தெரு, பிராட்வே மற்றும் மன்னடி போன்ற பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி முடிந்த நிலையில் ஆங்காங்கே சாலையில் மண்களால் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதில் வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இது தொடர்பாக இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர். பூபாலன் கூறியதாவது:- மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்தும் சாலைகள் போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அது மட்டு மில்லாமல் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

புது வண்ணாரப்பேட்டை பகுதி டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது இங்கு இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில பகுதிகளில் மின்விளக்குகள் விட்டு விட்டு எரிந்து வருகிறது. ராஜாஜி சாலையிலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் வழியில் திரும்பும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. விரைவில் தரமான சாலைகள் அமைத்து பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வடசென்னை பகுதிகளில் உட்புற சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் இருந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி முடிந்து சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் மறுபடியும் குடிநீர் வாரியத்தினர் சாலையை தோண்டியுள்ளனர். இதனால் ரோடுகள் பராமரிக்கபடாமல் உள்ளது. பொது இடங்களில் சாலையிலே மது குடித்து வருகிறார்கள்.

இதனால் பள்ளி மாணவிகள், வேலை முடித்து செல்லும் பெண்கள் பாதுகாப்பின்றி பயந்தபடி செல்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் குடித்துவிட்டு மது பாட்டில்களை சாலையிலே போட்டு விட்டு செல்கின்றனர். இதை அப்பகுதி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்வது மில்லை. சாலையில் மது அருந்துபவர்களை போலீசார் கண்டு கொள்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார். திருவொற்றியூர் கே.சி.பி. சாலையில் மழை பெய்த போது நேற்று முன்தினம் மழை நீர் அதில் தேங்கி நின்றதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.