உக்ரைன் போரை எதிர்த்த பத்திரிகையாளர்: ரஷ்யா எடுத்த அதிரடி தீர்மானம்
ரஷ்யாவின் உக்ரைனுடனான போரை எதிர்த்த பத்திரிகையாளருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுடனான போருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில், மைக்கேல் ஃபெல்ட்மேன் (Mikhail Feldman) என்ற பத்திரிகையாளர் உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வந்துள்ளார்.
சிறைத்தண்டனை
அதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில், Kaliningrad-ன் western exclave-ல் உள்ள நீதிமன்றமும், அவரது செயல் ரஷ்ய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.