;
Athirady Tamil News

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே காரணம் ; உலா வரும் காணொளி போலியானது

0

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்துக்கு ஒரு பறவையே காரணம் என சமூக ஊடகங்களில் வரும் காணொளி போலியானது என தெரியவந்துள்ளது.

இரண்டு தினங்களாக தீயை கக்கும் ஒரு பறவை காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ பரவலுக்கு குறித்த பறவையே காரணம் என ஒருவர் கூறுகின்றார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களுக்கு இந்த பறவையே காரணம் என்றும் இந்த பறவையைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் கூறியுள்ளது என அந்த காணொளியில் பேசும் நபர் கூறுவது போன்ற காட்சிகளே தற்போது பரவி வருகின்றன.

குறித்த நபர் சிரியாவைச் சேர்ந்தவர். அவரது பெயர் அப்துல் அல் கஹீல் என்பவராவார். அவர் குர்ஆனில் கூறப்படும் அற்புதங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்ற ஒருவர். இவரே இந்தத தகவலுடன் குறித்த பறவையில் தீயை கக்குவது போன்ற சித்திரிக்கப்பட்ட வீடியோவை இணைத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார்.

உண்மையில் அந்த பறவை தீயை கக்கும் காட்சியானது 2020 ஆம் ஆண்டு பிரேசிலியாவைச் சேர்ந்த VFX கலைஞர் Fabrício Rabachim என்பவரால் உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் அந்த காட்சி தவறான விளக்கங்களுடன் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.