;
Athirady Tamil News

உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகை

0

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவிலான கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் பொலிஸாரால் மீட்டப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்றுகையிடப்பட்டது .

குறித்த முற்றுகையின் போது 330 லீற்றர் கோடா, 15 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்கள் , தயாரிக்க பயன்படுத்தும் சில உபகரணங்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.