வலுவற்ற மக்களின் சமூகத் தேவைப்பாடுகளை அடையாளம் காணுவதற்கான கலந்துரையாடல்

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் வலுவற்ற மக்களின் சமூகத் தேவைப்பாடுகளை அடையாளம் காணுவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (13.02.2025) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் விஜித் ரொஹான் பொ்னான்டோ கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், தாய், தந்தையினை இழந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் மற்றும் தேவை மதிப்பீடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் உரிய தகவல்களுக்கு அமைய, உரிய திணைக்களங்கள் மற்றும் சுகவாழ்வுச் சங்கங்கள் ஊடாக செயற்றிடங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் சுசந்த குமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடின் மாகாணப் பொறுப்பதிகாரி ந. உமாநாத் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.