ஆசிரிய கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் 09.04.2025 புதன் காலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் த. பேரானந்த ராஜா அதிதியாக கலந்து சிறப்பித்தார்
கிறிஸ்தவ நெறி ஆசிரியர் மாணவி சுதாகர் கமலினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி விமல்ராஜ் உஷாநந்தினி உடற் பருமனை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மூத்த விரிவுரையாளர் சுரேந்திரன் சிவலோசனி அதிதி அறிமுக உரையை ஆற்றினார்.
அதிதியாக கலந்து கொண்ட வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா கலாசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த புதன்கிழமையும் உலக சுகாதார நாள் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது இதன் போது அமெரிக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பேராசிரியர் தவம் தம்பிபிள்ளை அதிதியாக கலந்து சிறப்பித்து இருந்தார்.