உலர் உணவு வழங்கும் நிகழ்வு

கிறிசலிஸ் (Chrysalis) அரச சார்பற்ற நிறுவனத்தினால் மருதங்கேணியில் இயங்கிவரும் பாதுகாப்பு இல்லத்திற்கான ஏறத்தாழ ரூபா 750,000.00 பெறுமதியான உலர் உணவானது கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதற்கு அமைவாக, முதலாம் கட்டத்தினை நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ம. பிரபாகரன் அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (23.04.2025) கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. தயாபரி மற்றும் கிறிசலிஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் டி. பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தார்கள்.