;
Athirady Tamil News

அநுர அரசாங்கம் தொழிற்சங்கங்களை பொம்மைகளாக பாவிக்கின்றனர்

0

காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை அதே போன்றே அனுர தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வடமாகண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மேதினத்தை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில், நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணியானது ஆரியகுளம் சந்தியை சென்றடைந்து ஸ்ரான்லி வீதியூடாக யாழ் நகரை சென்றடைந்து அதன் பின் யாழ் மாவட்ட செயலகம் சென்றடைந்து வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணி கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழில் சங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.