பஞ்சாப்: பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தசுஹா-ஹாஜீபூர் சாலையில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் பஸ் மோதியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த கோர விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் அமிர்தசரசுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் பஸ்சை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.